search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் விவசாயிகள்"

    • பெண் விவசாயிகள் வாழ்க்கை தரத்தை உயர்த்த இந்த திட்டம் பயன்பெறும்.
    • 2022-23-ம் ஆண்டுகளுக்கான பெண் விவசாயிகளுக்கு மட்டும் சிறிய அளவிலான காளான் உற்பத்திக் கூடம் ஒன்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மூலனூர்:

    மூலனூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் செல்வகுமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மூலனூர் வட்டாரத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கம் 2022-23-ம் ஆண்டுகளுக்கான பெண் விவசாயிகளுக்கு மட்டும் சிறிய அளவிலான காளான் உற்பத்திக் கூடம் ஒன்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மொத்தமாக செலவினம் ரூ.2 லட்சம் ஆகும். இதற்கான மானியமாக 50 சதவீதமாக ரூ.1லட்சம் வழங்கப்படுகிறது.

    பெண் விவசாயிகள் வாழ்க்கை தரத்தை உயர்த்த இந்த திட்டம் பயன்பெறும். எனவே இத்திட்டம் தேவையான விவசாயிகள் மட்டும் மூலனூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். செல்:- 96777 76214 மற்றும் 97905 26223. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • பெண் விவசாயிகளுக்கு காளான் உற்பத்தி மையம் அமைக்க தோட்டக்கலைத்துறை சார்பில் ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
    • சொந்த நிலம் அல்லது குத்தகை நிலம் வைத்திருக்கும் அனைத்து பெண்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

    உடுமலை:

    தற்போது உணவு வகையில், காளான் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஊட்டச்சத்து நன்மைகளுக்கு முக்கியத்துவம் பெறுகிறது.

    மேலும் சந்தையில் இறைச்சிக்கு மாற்றாக காளான்கள் கருதப்படுவதால் தமிழக அளவில், காளான் உற்பத்தி மற்றும் சந்தை வாய்ப்புகள் உறுதி செய்கிறது. அதன் அடிப்படையில் பெண் விவசாயிகளுக்கு காளான் உற்பத்தி மையம் அமைக்க தோட்டக்கலைத்துறை சார்பில் ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

    இது குறித்து உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகன ரம்யா கூறியதாவது:-

    பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அவர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் வகையில், தமிழக அரசு, தோட்டக்கலைத்துறை சார்பில் பெண் விவசாயிகளுக்கு காளான் உற்பத்தி மையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.காளான் உற்பத்தி மையம் அமைக்கும் போது தினசரி வருமானம் ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

    காளான் உற்பத்தி அலகு நிறுவுவதற்கு போதுமான சொந்த நிலம் அல்லது குத்தகை நிலம் வைத்திருக்கும் அனைத்து பெண்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம், செயல்படுத்தப்படும் ஊராட்சியில் வசிக்கும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    ×