என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மினி மாரத்தான்"
- மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 1,500 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
- முதல் பரிசாக தலா ரூ. 1 லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் கனிமொழி எம்.பி. வழங்கினார்.
திருச்செந்தூர்:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு. க.ஸ்டாலின் 71-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்குமான மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி திருச்செந்தூரில் சட்டமன்ற அலுவலகம் முன்பு நடை பெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழக மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இதில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 1,500 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆண்களுக்கான போட்டி திருச்செந்தூர் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, அடைக்கலாபுரம் வழியாக சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவிலும், பெண்களுக்கு திருச்செந்தூரில் இருந்து காயல்பட்டினம் வரையிலான சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவிலும் நடைபெற்றது.
கனிமொழி எம்.பி. கொடி அசைத்து மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது. போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன்-சூர்யா தம்பதியினர் வெற்றி பெற்றனர்.
இதனையடுத்து வெற்றி பெற்ற தம்பதியினருக்கு முதல் பரிசாக தலா ரூ. 1 லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் கனிமொழி எம்.பி. வழங்கினார்.
2-வது பரிசாக 75 ஆயிரம், 3-வது பரிசாக ரூ. 50 ஆயிரம் உட்பட 10 பரிசுகள் தலா இருபாலர்களுக்கும் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.
விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தி.மு.க. மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் ரமேஷ், நகர செயலாளர் சுடலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் மா.சுப்பிரமணியன் கன்னியாகுமரி வந்தார்.
- தனிநபர் மினி மாரத்தானில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று ஓடினார்.
கன்னியாகுமரி:
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று இரவு கன்னியாகுமரி வந்தார். அங்கு வந்து அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு அங்குள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான புதிய அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இன்று அதிகாலை 4 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் இருந்து காணிமடம் வரை உள்ள 21.4 கிலோ மீட்டர் தூரம் நடந்த தனிநபர் மினி மாரத்தானில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்று ஓடினார். அவருடன் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு ஓடினார்.
கன்னியாகுமரியில் நடந்த இந்த மினி மாரத்தானில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் 148-வது முறையாக ஓடி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- டி.ஐ.ஜி. தொடங்கி வைத்தார்
- நாளை கட்டுரை போட்டிகள் நடைபெற உள்ளது
வேலூர்:
வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் 270 பெண் காவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2-ம் நிலை காவலர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.
மினி மாரத்தான் போட்டி
அதன்படி, நேற்று நடந்த போட்டியில் முதல் 3-இடங்களை பிடித்த 2-ம் நிலை காவலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
இதைதொடர்ந்து, இன்று காலை தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவலர்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடந்தது.
போட்டியை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி தொடங்கி வைத்தார். இதில் காவலர் பயிற்சி முதல்வர் ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் கனிமொழி, விஜயலட்சுமி மற்றும் பலர் பங்கேற்றனர்.
சான்றிதழ்
வேலூர் கோட்டை நுழைவு வாயில் காந்தி சிலை அருகே இருந்து தொடங்கிய மினி மாரத்தான் போட்டி, மீன் மார்க்கெட், கோட்டை பின்புறம், அண்ணா கலையரங்கம் வழியாக அண்ணா சாலை, கோட்டை மைதானத்தில் ஒரு சுற்று என 5 கி.மீ.நடந்தது.
இப்போட்டியில் முதல் 5 இடங்களை பிடித்த காவலர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, நாளை கட்டுரை போட்டிகள் நடைபெற உள்ளது.
- போட்டியை கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- கடலூர் டவுன்ஹாலில் இருந்து தொடங்கி சில்வர் பீச் வரை சென்று முடிவடைந்தது.
கடலூர்:
கடலூர் 30 மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடலூர் சில்வர் பீச்சில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நெய்தல் புத்தக திருவிழா வருகிற 29-ந் தேதி தொடங்கி அக்டோபர் 9-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நெய்தல் புத்தக திருவிழா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று காலை கடலூரில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு சிவா வரவேற்றார். மினி மாரத்தான் போட்டி கடலூர் டவுன்ஹாலில் இருந்து தொடங்கி சில்வர் பீச் வரை சென்று முடிவடைந்தது. இதில் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் அருள் பாபு, சுபாஷினி ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்பு
- நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கினார்.
கன்னியாகுமரி :
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 27-ந் தேதி உலக சுற்றுலா தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல இந்த ஆண்டு சுற்றுலா மற்றும் பசுமை முதலீடு என்ற தலைப்பில் இன்று நாடு முழுவதும் உலக சுற்றுலா தின விழா கொண்டா டப்பட்டது.
குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் குமரி மாவட்ட சுற்றுலாத்துறை இணைந்து கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுலா தின விழாவை கன்னியாகுமரி யில் இன்று கொண்டாடியது. இதையொட்டி இன்று காலை கன்னியாகுமரியில் மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது. கன்னியாகுமரி நான்கு வழி சாலை முடியும் ஜீரோ பாயிண்ட் பகுதியில் இருந்து காலை 7 மணிக்கு தொடங்கிய மினி மாரத்தான் ஓட்டத்தை குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கினார்.
அகஸ்தீஸ்வரம் விவே கானந்தா கல்லூரி, விவேகானந்தா பாலி டெக்னிக் கல்லூரி, பால்குளம் ரோகிணி பொறி யியல் கல்லூரி உள்ளிட்ட 5 கல்லூரிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர். கன்னியா குமரி சீரோ பாயிண்ட் பகுதியில் இருந்து தொடங்கிய இந்த மினி மாரத்தான் ஓட்டம் மகாதானபுரம் 4 வழி சாலை ரவுண்டானா சந்திப்பு வரை சென்று திரும்பி மீண்டும் அதே வழியாக சீரோ பாயிண்ட் பகுதியை சென்ற டைந்தது. மொத்தம் 6 கிலோ மீட்டர் தூரம் இந்த மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது.
தொடக்க விழா நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன், குமரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பி ரண்டு மதியழகன், கன்னியா குமரி துணை சூப்பிரண்டு மகேஷ்குமார், குமரி மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார், உதவி அலுவலர் கீதா ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் தூய்மை பணி நடந்தது. மேயர் மகேஷ் தலைமையில் கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவி கள் கலந்து கொண்டு கடற்கரையை சுத்தம் செய்தனர்.
விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழக படகுத்துறையில் வைத்து சுற்றுலாத் துறை சார்பில் தமிழக கலாச்சார முறைப்படி நெற்றியில் சந்தனம் குங்குமம் திலகமிட்டு சங்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு இனிப்புடன் சுற்றுலா கையேடும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.
இது தவிர பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகளுக்கு இடையே சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தின விழாவை யொட்டி பேச்சு மற்றும் கட்டுரை போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி மாணவர்களின் பேரணியும் நடந்தது. ஓட்டல் மற்றும் லாட்ஜூகளில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட சுற்றுலா அதிகாரி சதீஷ்குமார் உதவி அலுவலர் கீதா ராணி ஆகியோர் செய்து இருந்த னர்.
- அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் அருகிலிருந்து விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவிற்கு நடைபெற உள்ளது.
- வெற்றி பெறுபவர்களுக்கு பரிசும் மற்றும் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
தஞ்சாவூா்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யூ) கும்பகோணம் மண்டலம் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாத்திட வேண்டும்.
பொது போக்குவரத்தை பலப்படுத்திட, விபத்தை தடுத்திட, பொதுத் துறையை பாதுகாத்திட வலியுறுத்தி வருகிற 12-ம் தேதி காலை 6 மணி அளவில் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் அருகிலிருந்து விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவிற்கு நடைபெற உள்ளது. நுழைவு கட்டணம் ரூ. 200 மட்டும். முன் பதிவிற்கு நாளை (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். நாளை மாலை 6 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசும் மற்றும் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
மாரத்தானில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் மற்றும் ஆண்கள், பெண்கள் 9894377805, 7010411396 ஆகிய செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்கிய மினி மாரத்தான் போட்டியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
- மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
நாகர்கோவில்:
பழையாற்றை பாதுகாக்க வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி இன்று கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரை 21 கிலோமீட்டர் தூரம் நடந்தது.
கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்கிய மினி மாரத்தான் போட்டியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மனோ தங்கராஜ், டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து தொடங்கிய மினி மாரத்தானில் பங்கேற்றனர்.
மணக்குடி, புத்தளம், தெங்கம்புதூர், கோட்டார், சந்திப்பு, அண்ணா பஸ் நிலையம் வழியாக நாகர் கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் முடிவடைந்தது. அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், மனோ தங்கராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஹரிகிரண் பிரசாத், சரவணன் ஆகியோர் 21 கிலோ மீட்டர் தூரத்தையும் ஓடி வந்தனர். 21 கிலோமீட்டர் தூரத்தை கர்நாடகாவைச் சேர்ந்த பரசப்பா கலிடா 1 மணி நேரம் 9 நிமிடம் 26 வினாடிகளில் கடந்து முதல் பரிசை பெற்றார். முதல் பரிசாக இவருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.
கேரளாவைச் சேர்ந்த ஜெகநாதன் 1 மணி நேரம் 9 நிமிடம் 59 வினாடிகளில் கடந்து இரண்டாவது பரிசை தட்டி சென்றார். இவருக்கு ரூ.15 ஆயிரம் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கோவையைச் சேர்ந்த வினோத் 1 மணி நேரம் 13 நிமிடம் 53 வினாடிகளில் கடந்து மூன்றாம் பரிசை பெற்றார்.
இவருக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும் சான்றிதழ்களும், மெட்டலும் வழங்கப்பட்டது. 21 கிலோ மீட்டர் பெண்களுக்கான பிரிவில் சமீதா முதல் பரிசு பெற்றார். இவர் 2 மணி நேரம் 37 நிமிடம் 42 வினாடிகளில் 21 கிலோ மீட்டரை கடந்தார். இவருக்கு ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 2-வது பரிசை அஸ்வினி தட்டி சென்றார். இவர் 2 மணி நேரம் 50 நிமிடம் 43 வினாடிகளில் கடந்தார். இவருக்கு ரூ. 15,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 3-வது பரிசை தீபா பெற்றார். இவர் 3 மணி நேரம் 7 நிமிடம் 11 வினாடிகளில் கடந்தார். இவருக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. ஆண்களுக்கு 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான பிரிவில் ராமசாமி 1 மணி நேரம் 42 நிமிடம் 42 வினாடிகளில் கடந்து முதல் பரிசு பெற்றார். இவருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. மாரப்பன் 1 மணி நேரம் 44 நிமிடம் 26 வினாடிகள் கடந்து 2-வது பரிசை தட்டி சென்றார். இவருக்கு ரூ.7 ஆயிரம் வழங்கப்பட்டது. டிக்ஸன் 1மணி நேரம் 47 நிமிடம் 11 வினாடிகள் கடந்து மூன்றாம் பரிசை தட்டி சென்றார். இவருக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங் கப்பட்டது.
10 கிலோமீட்டர் ஆண்களுக்கான மினி மாரத்தான் போட்டியில் தினேஷ் முதல் பரிசும், ஆனந்த அசோக் 2-ம் பரிசும், நிதீஷ்குமார் 3-ம் பரிசும் பெண்களுக்கான 10 கிலோ மீட்டர் போட்டியில் கிரிஸ்டல் முதல் பரிசும், கவுசிகா 2-வது பரிசும், அடினா ஆர்தார் 3-வது பரிசும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசும் சான்றிதழ்களும், மெட்டல்களும் வழங்கப்பட் டது.
இதை தொடர்ந்து மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மாரத்தான் ஒருங்கிணைப்புச் செயலாளர் டாக்டர் தேவா பிரசாத் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி அவரது 138- வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து தொடங்கிய மினி மாரத்தானில் பங்கேற்றனர்.
- 21 கிலோமீட்டர் தூரத்தை கர்நாடகாவைச் சேர்ந்த பரசப்பா கலிடா 1 மணி நேரம் 9 நிமிடம் 26 வினாடிகளில் கடந்து முதல் பரிசை பெற்றார்.
நாகர்கோவில் :
பழையாற்றை பாது காக்க வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி இன்று கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரை 21 கிலோமீட்டர் தூரம் நடந்தது.
கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்கிய மினி மாரத்தான் போட்டியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மனோ தங்கராஜ், டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து தொடங்கிய மினி மாரத்தானில் பங்கேற்றனர்.
மணக்குடி, புத்தளம், தெங்கம்புதூர், கோட்டார், சந்திப்பு, அண்ணா பஸ் நிலையம் வழியாக நாகர் கோவில் அண்ணா விளை யாட்டரங்கத்தில் முடிவ டைந்தது. அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், மனோ தங்கராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஹரிகிரண் பிரசாத், சரவணன் ஆகியோர் 21 கிலோ மீட்டர் தூரத்தையும் ஓடி வந்தனர். 21 கிலோமீட்டர் தூரத்தை கர்நாடகாவைச் சேர்ந்த பரசப்பா கலிடா 1 மணி நேரம் 9 நிமிடம் 26 வினாடிகளில் கடந்து முதல் பரிசை பெற்றார்.
முதல் பரிசாக இவருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.கேரளாவைச் சேர்ந்த ஜெகநாதன் 1 மணி நேரம் 9 நிமிடம் 59 வினாடிகளில் கடந்து இரண்டாவது பரிசை தட்டி சென்றார். இவருக்கு ரூ.15 ஆயிரம் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கோவையைச் சேர்ந்த வினோத் 1 மணி நேரம் 13 நிமிடம் 53 வினாடிகளில் கடந்து மூன்றாம் பரிசை பெற்றார்.
இவருக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும் சான்றி தழ்களும், மெட்டலும் வழங் கப்பட்டது. 21 கிலோ மீட்டர் பெண்களுக்கான பிரிவில் சமீதா முதல் பரிசு பெற்றார். இவர் 2 மணி நேரம் 37 நிமிடம் 42 வினாடிகளில் 21 கிலோ மீட்டரை கடந்தார். இவருக்கு ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 2-வது பரிசை அஸ்வினி தட்டி சென்றார். இவர் 2 மணி நேரம் 50 நிமிடம் 43 வினாடிகளில் கடந்தார். இவருக்குரூ. 15,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 3-வது பரிசை தீபா பெற்றார். இவர் 3 மணி நேரம் 7 நிமிடம் 11 வினாடிகளில் கடந்தார். இவருக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. ஆண்களுக்கு 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான பிரிவில் ராமசாமி 1 மணி நேரம் 42 நிமிடம் 42 வினாடி களில் கடந்து முதல் பரிசு பெற்றார். இவருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. மாரப்பன் 1 மணி நேரம் 44 நிமிடம் 26 வினாடிகள் கடந்து 2-வது பரிசை தட்டி சென்றார். இவருக்கு ரூ.7 ஆயிரம் வழங்கப்பட்டது. டிக்ஸன் 1மணி நேரம் 47 நிமிடம் 11 வினாடிகள் கடந்து மூன்றாம் பரிசை தட்டி சென்றார். இவருக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
10 கிலோமீட்டர் ஆண்க ளுக்கான மினி மாரத்தான் போட்டியில் தினேஷ் முதல் பரிசும், ஆனந்த அசோக் 2-ம் பரிசும், நிதீஷ்குமார் 3-ம் பரிசும் பெண்களுக்கான 10 கிலோ மீட்டர் போட்டியில் கிரிஸ்டல் முதல் பரிசும், கவுசிகா 2-வது பரிசும், அடினா ஆர்தார் 3-வது பரிசும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசும் சான்றிதழ்களும், மெட்டல்களும் வழங்கப்பட் டது.
இதை தொடர்ந்து மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி அவரது 138- வது போட்டி என்பது குறிப்பி டத்தக்கதாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்