search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயர்கள்"

    • கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி கிறிஸ்தவர்கள் வீடுகளில் ஸ்டார்கள் கட்டியும், குடில்கள் அமைத்தும், மின் விளக்கு அலங்காரங்கள் செய்தும் கிறிஸ்துமசை கொண்டாடினர்
    • கோஸ்தே சபைகளிலும் கிறிஸ்துமஸ் வழிபாடுகள் நடந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்கள் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது. மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது

    நாகர்கோவில் :

    உலகம் முழுவதும் கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் கிறிஸ்துமஸ் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி கிறிஸ்தவர்கள் வீடுகளில் ஸ்டார்கள் கட்டியும், குடில்கள் அமைத்தும், மின் விளக்கு அலங்காரங்கள் செய்தும் கிறிஸ்துமசை கொண்டாடினர். கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி நேற்று நள்ளிரவு கத்தோலிக்க தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.

    கோட்டார் சவேரியார் பேராலயத்தில் நடந்த திருப்பலியில் ஆயர் நசரேன் சூசை கலந்து கொண் டார். ஆலய பங்கு தந்தை ஸ்டேன்லி சகாய சீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பிரார்த்த னையில் பங்கேற்றவர்கள் புத்தாடைகள் அணிந்து கலந்து கொண்டனர். பிரார்த்தனை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    இன்று காலையிலும் திருப்பலி நடந்தது. குழித் துறை, திருத்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயம் கன்னியாகுமரி புனித உபகார மாதா ஆலயம், நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலயம், குளச்சல் காணிக்கை மாதா ஆலயம் உட்பட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடந்தது. சிறப்பு திருப்பதியில் ஏராளமா னோர் கலந்து கொண்ட னர்.

    திருப்பலி முடிந்ததும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். சி.எஸ்.ஐ. ஆலயங்களில் இன்று அதிகாலையில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடந்தது. மத்திய கோடு சி.எஸ்.ஐ. ஆலயத்தில் நடந்த பிரார்த்தனையில் பிஷப் செல்லையா கலந்து கொண்டார். தேங்காய் பட்டினம் அருகே பறக்கல் விளை சி.எஸ்.ஐ. ஆலயம் நெய்யூர் அருகே நெல்லி யறை கோணம் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் நடந்த பிரார்த்தனையிலும் பிஷப் செல்லையா பங்கேற்றார்.

    இதே போல் பெந்தே கோஸ்தே சபைகளிலும் கிறிஸ்துமஸ் வழிபாடுகள் நடந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்கள் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது. மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கடற்கரை கிராமங்களில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள அனைத்து கிராமங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.மேலும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ×