search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாட்டு நலப்பணித்திட்ட முகாம்"

    • ரெயில் நிலையத்தில் உள்ள குப்பைகள், செடி, கொடிகளை மாணவ, மாணவிகள் அகற்றினர்.
    • முகாமில் அரிமா சங்க நிர்வாகிகள், ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் சார்பாக ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மாணவர்கள் மற்றும் மாணவிகள் 40 பேர் குழுவாக சேர்ந்து பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் உள்ள குப்பைகள் மற்றும் தேவையற்று வளர்ந்திருக்கும் செடி, கொடிகளை அகற்றினர். இருக்கை களை சீர்படுத்தி சுத்தப்படுத்தினர். பாவூர்சத்திரம் ரெயில்வே நிலையத்தின் நிலைய அதிகாரிகள் ஒத்துழைப்போடு அரிமா சங்கம், ஊராட்சி தலைவர் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் ஐன்ஸ்டீன் கல்லூரி மாணவர்கள் இணைந்து இந்தப் பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை ஐன்ஸ்டீன் கல்லூரி நிர்வாக இயக்குனர் ஆலடி எழில்வாணன்,லயன்ஸ் கிளப் கே.ஆர்.பி.இளங்கோ, லட்சுமி சேகர், பரமசிவன், தளிர் தங்கராஜ், பாண்டியராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

    • முகாமினை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.
    • கோயில் தூய்மை பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நாட்டு நலப்பணித்திட்ட முகாமினை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நகர்மனற் தலைவர் பரிதா நவாப் பங்கேற்று முகாமினை தொடங்கி வைத்தார்.

    பின்னர் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் பள்ளி வளாகத்தினை சுத்தம் செய்து வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

    இது குறித்து தலைமையாசிரியர் கூறுகையில், வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் முகாமில் ஒவ்வொரு நாளும் மருத்துவ முகாம், சுய முன்னேற்ற விழிப்புணர்வு முகாம், முதலுதவி முகாம், கண்சிகிச்சை முகாம் மற்றும் கோயில் தூய்மை பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஸ்வேதா ராணி, பள்ளி ஆசிரியர்கள் திவ்யலட்சுமி, செல்வி, சண்முகப்பிரியா, புவனேஸ்வரி, கவிதா, வெண்ணிலா, மற்றும் முரளி, நயாஸ், மணிமேகலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×