search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏசி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 2 நாட்களாக வெப்ப அலை காரணமாக சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
    • கடும் வெப்ப அலைக்கு மத்தியில் ஏசி இல்லாமல் விமானத்திற்குள் பயணிகள் காத்திருந்ததால் பலரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் ஜூன் மாதத்தில் பாதியை கடந்தபிறகும் வெயில் குறைந்தபாடில்லை. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 117 டிகிரியை தொட்டு, அதன்பிறகு கொஞ்சம் குறைந்தாலும் சராசரியாக 110 முதல் 113 வரை வெப்பம் இருந்து கொண்டே இருக்கிறது.

    கடந்த 2 நாட்களாக வெப்ப அலை காரணமாக சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்து இருந்தனர். அது நேற்றும் நீடித்தது. டெல்லி சப்தர்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் நேற்று அதிகபட்சமாக 113 டிகிரி வெப்பம் பதிவானது.

    இந்நிலையில் டெல்லியில் இருந்து தர்பங்காவிற்கு செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் (SG 486) இன்று பயணிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏசி இல்லாமல் தவித்தனர்.

    டெல்லியில் நிலவும் கடும் வெப்ப அலைக்கு மத்தியில் ஏசி இல்லாமல் விமானத்திற்குள் பயணிகள் காத்திருந்ததால் பலரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

    • டெல்லியில் கடும் வெப்பம் நிலவி வருவதால் அங்கு இருக்கும் டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளது.
    • இதனால் பூங்காவின் நிர்வாகம் அங்கு இருக்கும் 1300 விலங்குகளுக்கும் வெப்ப அலையில் இருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    இந்தாண்டு கோடைக்காலம் மிகவும் கொடுமையாக இருக்கிறது. மக்கள் வெயிலில் வாடி வதங்குகின்றனர். மனிதர்களாலே இந்த வெயிலின் சூட்டை தாங்கிக் கொள்ள முடியவில்லை. வாயில்லா ஜீவங்கள் என்ன அவஸ்தை படுகின்றனர் என்பதை சொல்லவா வேண்டும்.

    டெல்லியில் கடும் வெப்பம் நிலவி வருவதால் அங்கு இருக்கும் டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பூங்காவின் நிர்வாகம் அங்கு இருக்கும் 1300 விலங்குகளுக்கும் வெப்ப அலையில் இருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    கோடை வெப்பத்தில் இருந்து தப்பிபதற்கு ஃப்ரூட் ஐஸ் பால், ஐஸ் கிரீம்உணவாக தருகின்றனர் தண்ணீரை சிபிரிங்க்லர் முறையில் விலங்குகள் மீது தெளிக்கின்றனர். விலங்களுக்கு சாப்பாட்டு அளவை குறைத்து நீர்சத்து மிகுந்த உணவுகளையும் , நீர் நிறைந்த ஆகாரத்தையும் கொடுக்கின்றனர்.

     

    ஒவ்வொரு விலங்களுக்கு ஏற்றார்போல இந்த பணிகளை செய்து வருகின்றனர். விலங்குகள் இருக்கும் இடத்தில் ஏர் கூலர்கல்களும் வைத்துள்ளனர்.

    • வீடியோ வைரலாகி 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த வாலிபரை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

    கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் பொது மக்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில் வீட்டில் உள்ள ஃபிரிட்ஜை வாலிபர் ஒருவர் ஏ.சி.யாக பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    எக்ஸ் தளத்தில் எமினென்ட் வோக் என்பவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், வீட்டில் உள்ள ஃபிரிட்ஜை ஒருவர் திறந்து வைத்திருக்கிறார். அதற்கு முன்பு ஏர் கூலரையும் வைத்துள்ள நபர், அவற்றின் முன்புறம் கட்டிலில் நிம்மதியாக படுத்து உறங்குவது போன்று காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலாகி 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது.

    வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த வாலிபரை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். இந்த முறையில் வெப்பம் மேலும் அதிகரிக்கும். குளிர்ச்சி இருக்காது என சிலர் பதிவிட்டுள்ளனர். இயற்பியல் விதிப்படி இந்த முறை வெப்பத்தை தான் அறையில் உருவாக்கும் என சிலரும், இப்படி ஃபிரிட்ஜை திறந்து வைத்தால் அது விரைவிலேயே பழுதாகிவிடும் என சிலரும் பதிவிட்டுள்ளனர். சில நெட்டிசன்கள் உங்களிடம் இருப்பதை வைத்து சிறப்பான பொருளை உருவாக்குங்கள் என பதிவிட்டுள்ளனர். அதே நேரம் சில பயனர்கள், அவரது புதுமையான செயலை பாராட்டியும் பதிவிட்டு வருகின்றனர்.

    • ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் தற்போது ஏ.சி. வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
    • சென்னையில் புறநகர் பகுதிகளில் ஏ.சி. விற்பனை அமோகமாக நடக்கிறது.

    சென்னை:

    தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. மார்ச் மாதத்தில் தொடங்கிய வெயிலின் தாக்கம் ஏப்ரல் மாதம் பல மாவட்டங்களில் அதிகரித்தது.

    108 டிகிரி வரை வெயில் கொளுத்துகிறது. மேலும் வட மாவட்டங்களில் வெப்ப அலை கடுமையாக தாக்கி வருகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இரவில் உஷ்ணம் அதிகமாகி புழுக்கம் ஏற்படுகிறது. இதனால் வீடுகளுக்குள் தூங்க முடியவில்லை. வீட்டிற்கு வெளியே காற்று இல்லாததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் ஏ.சி. பயன்பாடு அதிகரித்துள்ளது.

    பெரும்பாலான குடும்பங்களில் புதிதாக ஏ.சி. வாங்கி பயன்படுத்த தொடங்கி விட்டனர். கடன் வசதி இருப்பதால் முன் தொகையை செலுத்தி ஏ.சி. வாங்குகின்றனர்.

    ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் தற்போது ஏ.சி. வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். வெயிலின் வெப்பத்தை தாங்க முடியாமல் இரவில் தூக்கம் இல்லாமல் குழந்தைகளின் வற்புறுத்தலின் பேரில் ஏ.சி. வாங்குவதற்கு குடும்பம் குடும்பமாக கடைகளுக்கு செல்கின்றனர்.

    சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்கள், கிராமங்கள் நகரப்பகுதியிலும் ஏ.சி. விற்பனை 'களை' கட்டி உள்ளது.

    ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு வித சலுகைகளை கூறி ஏ.சி. விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. சென்னையில் வீட்டு உபயோக

    கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு ஜவுளி வாங்கும் கூட்டம் போல தற்போது ஏ.சி. வாங்குவதற்கு கடைகளில் குவிகின்றனர்.

    சென்னையில் புறநகர் பகுதிகளில் ஏ.சி. விற்பனை அமோகமாக நடக்கிறது. வெயிலின் தாக்கம் ஜூன் மாதம் வரை இருக்கக்கூடும் என்பதால் அதனை சமாளிக்க ஏ.சி. வாங்குவதில் தீவிரம் காட்டுகின்றனர்.

    ஏ.சி. விற்பனை கடந்த ஆண்டைவிட 3 மடங்கு அதிகமாக இருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏ.சி.யை வாங்கினாலும் அதனை வீடுகளில் வந்து பொறுத்துவதற்கு காலதாமதம் ஆகிறது.

    • எந்த பிராண்ட் ஏ.சி. வாங்கினாலும் அவை ஒரு வருடம் கூட முழுமையாக நீடிப்பதில்லை.
    • கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னை:

    வெயிலின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகமாகி வருவதால் வீடுகளில் ஏ.சி.யை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கழிவுநீர் தேங்கி நிற்கும் நீர்நிலைகள் அல்லது கழிவுநீர் உந்து நிலையம் அருகில் உள்ள வீடுகளில் இருக்கும் ஏ.சி. எந்திரங்கள் கழிவுநீரில் இருந்து வெளியேறும் நீராவி மற்றும் வாயுக்களால் பாதிக்கப்படுகிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    இவை வீட்டில் இருக்கும் மின் சாதனங்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஏ.சி. எந்திரங்களில் உள்ள செம்பு கம்பிகளை அதிகமாக பாதிக்கிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.

    இதன் காரணமாக ஏ.சி. எந்திரங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு அதை சரி செய்ய ஒரு தொகையை செலவு செய்யும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து அண்ணாநகரில் வசிக்கும் சந்தியா என்பவர் கூறும் போது, நாங்கள் சமீபத்தில் ஸ்பிலிட் ஏ.சி.யை வாங்கினோம். 15 நாட்களுக்குப் பிறகு அதில் பழுது ஏற்பட்டது. ஏ.சி. மெக்கானிக்கை வர வழைத்து பழுது பார்க்கையில் அவர் செப்புச் சுருள் மெலிந்ததால் வாயு கசிவு ஏற்பட்டதை கண்டறிந்தார். அதனை சரிசெய்த பின்னர் மீண்டும் மீண்டும் இதே மாதிரி பழுது ஏற்பட்டது. அப்போதும் செப்பு கம்பியை மாற்றினோம். இதற்குக் காரணம் என்ன என்று கேட்டபோது நாங்கள் வசிக்கும் இடம் அருகில் கழிவுநீர் அதிகம் நிறைந்த ஓட்டேரி நீரோடை மற்றும் மாசுபட்ட நீரிலிருந்து வரும் நச்சுபுகைகள் ஏசி எந்திரத்தில் உள்ள செப்பு பாதிப்பதாக என்ஜினியர்கள் தெரிவித்தனர். அருகில் குடியிருப்பவர்கள் பலருக்கும் இதே நிலை தான் என்று கூறினார்.

    மேலும் அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறும்போது, எந்த பிராண்ட் ஏ.சி. வாங்கினாலும் அவை ஒரு வருடம் கூட முழுமையாக நீடிப்பதில்லை. ஒவ்வொரு முறையும் பழுதை சரி செய்யும் பொழுது ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை செலவாகிறது. ரூ.50 ஆயிரம் கொடுத்து 6 மாதத்திற்கு முன்பு ஒரு ஏ சி. வாங்கினேன். அது ஒரே மாதத்தில் பழுதாகிவிட்டது என்றார்.

    மேலும் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் பெரம்பூர் மற்றும் கொரட்டூர் பகுதி களில் குடியிருப்பவர்கள் அருகில் இருக்கும் கழிவு நீர் உந்து நிலையத்தில் இருந்து வெளிவரும் வாயுக்களால் ஏ.சி. எந்திரங்களில் பழுது ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். இதற்காக நாங்கள் நிறைய பணம் செலவழிக்கிறோம் என்று அவர்கள் வேதனையுடன் கூறினார்கள்.

    இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி.யின் ஓய்வு பெற்ற வேதியியல் பொறியியல் துறை பேராசிரியர் டி. சுவாமிநாதன் கூறியதாவது:-

    தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து ஹைட்ரஜன் சல்பைட் வாயு வெளியேகிறது. இது அழுகிய முட்டையை போன்ற துர்நாற்றத்தை வீசும். இது கந்தகமாகவோ அல்லது கந்தக அமிலமாகவோ மாறக்கூடும். இவை ஏ.சி.யின் செப்புப் பகுதிகளுடன் வினைபுரிந்து, அதை அரித்து வாயு கசிவை ஏற்படுத்துகிறது.

    மற்ற மின் சாதனங்களில் ஏ.சி.யை போல அதிக செப்பு பாகங்கள் இல்லை, அதனால்தான் டி.வி. போன்ற பிற மின் சாதனங்களை விட ஏ.சி. எந்திரங்கள் மட்டுமே அடிக்கடி சேதமடைகின்றன என்றார்.

    • பாம்பு பிடிக்கும் வாலிபர் வந்து ஏசிக்குள் பதுங்கியிருந்த 3 அடி நீளமுள்ள பாம்பை பிடித்தார்.
    • ஏ.சி.யில் பாம்பு புகுந்தது எப்படி என்பது புரியாத புதிராக உள்ளது என்று கடையின் உரிமையாளர் கூறினார்.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி பஸ் நிலையத்தின் அருகே மின்சாதனங்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது.

    இந்த கடையில் ஏசி பொருத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை கடையில் அதன் உரிமையாளர் வேலை செய்து கொண்டிருந்தார்.

    ஏசியை இயக்குவதற்காக சுவிட்ச் போடுவதற்காக சென்றார். அப்போது கடையில் பணியாற்றும் ஊழியர்கள் பாம்பு ஒன்று ஏசியில் இருந்து வெளியே வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    இதனால் கடையில் இருந்து அனைவரும் கூச்சலிட்டபடி வெளியே ஓடி வந்தனர்.

    இதுகுறித்து பாம்பு பிடிக்கும் இளைஞருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த வாலிபர் அங்கு வந்து ஏசிக்குள் பதுங்கியிருந்த 3 அடி நீளமுள்ள பாம்பை பிடித்தார். பிடிப்பட்ட பாம்பை வனப்பகுதியில் விட்டார்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஏ.சி.யில் பாம்பு புகுந்தது எப்படி என்பது புரியாத புதிராக உள்ளது என்று கடையின் உரிமையாளர் கூறினார். 

    ×