search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் பூசாரி கைது"

    • பூசாரி கார்த்திக் முனுசாமி மீது பாலியல் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • கார்த்திக் முனுசாமி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டிருந்தது.

    போரூர்:

    சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி பெண் ஊழியர் ஒருவர் பாரிமுனையில் உள்ள கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.

    பூசாரி கார்த்திக் முனுசாமி, கோவில் தீர்த்தம் என்று கூறி ஒரு திரவத்தை குடிக்க கொடுத்தார். அதனை குடித்த பிறகு நான் மயங்கி விட்டேன்.

    அப்போது பூசாரி கார்த்திக் முனுசாமி என்னை கற்பழித்துவிட்டார். இதன் பின்னர் என்னை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்தார். என்னுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையிலும் முக்கிய பிரமுகர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவருடன் நெருக்கமாக இருக்க சொன்னார் என்று புகார் அளிக்கப்பட்டிருந்தது.

    இது தொடர்பாக விருகம்பாக்கம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பூசாரி கார்த்திக் முனுசாமி மீது பாலியல் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து பூசாரி கார்த்திக் முனுசாமியை கோவில் நிர்வாகம் சஸ்பெண்டு செய்திருந்தது. தலைமறைவான அவரை போலீசார் தேடி வந்தனர். அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் பதுங்கி இருந்த பூசாரி கார்த்திக் முனுசாமி கைது செய்யப்பட்டார்.

    • லட்சுமியின் 2 காதுகளும் அறுக்கப்பட்டு அவற்றில் இருந்த தங்க தோடுகளை பறித்துச் சென்றது தெரியவந்தது.
    • இறந்து விட்டதாக நினைத்து காதுகளை அறுத்து தோடுகளை திருடி சென்றதாகவும் கூறினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி கங்கபாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பையன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 52).

    இவர் கடந்த 27-ந்தேதி அதிகாலை இயற்கை உபாதையை கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.இந்நிலையில் அதே பகுதியில் உள்ள வயல்வெளி அருகே ரத்தக்காயங்களுடன் ஜெயலட்சுமி மயங்கி விழுந்து கிடந்தார்.

    அவ்வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஜெயலட்சுமியின் வீட்டுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இந்த குறித்து பஞ்ச பள்ளி போலீசில் புகார் தரப்பட்டது. ஜெய லட்சுமியின் 2 காதுகளும் அறுக்கப்பட்டு அவற்றில் இருந்த தங்க தோடுகளை பறித்துச் சென்றது தெரியவந்தது.தற்போது கோமா நிலையில் ஜெயலட்சுமி சிகிச்சை பற்று வருகிறார்.

    இந்நிலையில் அவரை தாக்கி தோடுகளை பறித்தது பஞ்சப்பள்ளி அருகேயுள்ள கூத்தடிப்பட்டியை சேர்ந்த கோவில் பூசாரி மாதன் (64) என்பது தெரிய வந்தது.

    அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது ஜெயலட்சுமியின் கணவர் இறந்துவிட்ட பிறகு மாதனுடன் கள்ள தொடர்பில் இருந்ததா கவும், சமீபத்தில் வேறு இருவருடனும் ஜெயல ட்சுமி தொடர்பு வைத்து க்கொண்டதால் ஆத்திரம் அடைந்து அவரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் மாதன் தெரிவித்தார்.

    இரும்பு கம்பியால் ஜெயலட்சுமியை தாக்கியபோது அவர் மயங்கி விழுந்ததால் இறந்து விட்டதாக நினைத்து காதுகளை அறுத்து தோடுகளை திருடி சென்றதாகவும் கூறினார். இதையடுத்து மாதனை போலீசார் சிறையில் அடைத்தனர்.

    ×