என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நாட்டு நலப்பணித்திட்டம்"
- தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.
- ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முகம்மது, அப்ரோஸ் மற்றும் பாத்திமா கனி ஆகியோர் செய்திருந்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டது.
இதில் கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் தலைமையில் மாணவ-மாணவிகள் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சேக் அப்துல்லா தேச ஒற்றுமையை வலியுறுத்தி பேசினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முகம்மது, அப்ரோஸ் மற்றும் பாத்திமா கனி ஆகியோர் செய்திருந்தனர்.
- சேக்கண்டஅள்ளியில் நாட்டுநலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது.
- கோவில் தூய்மை செய்யப்பட்டு, மழைநீர் சேகரிப்பு தொட்டி நிறுவப்பட்டது.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் ஸ்ரீ ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சேக்கண்டஅள்ளியில் நாட்டுநலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் ஸ்ரீ ராம் பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன், ஊராட்சி ஒன்றிய தலைவர் முருகன், ஊராட்சி மன்ற துணை தலைவர் மதியழகன், வார்டு கவுன்சிலர்கள் சுரேஷ், சபரி, மற்றும் திட்ட அலுவலர்கள் தமிழரசன், திருப்பதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற இப்பணித்திட்டத்தில் முள்புதர், விளையாட்டு மைதானம் மற்றும் அருகில் உள்ள கோவில் தூய்மை செய்யப்பட்டு, மழைநீர் சேகரிப்பு தொட்டி நிறுவப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள சுற்றுசுவர் தூய்மை செய்து சுற்றுச்சுவருக்கு வெள்ளை அடிக்கப்பட்டு கிராமம் தூய்மை செய்யப்பட்டது.
நிறைவு விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், முகாமை நேரில் பார்வையிட்டு இத்திட்டம் சிறப்பாக நடத்திய மாணவர்களை உற்சாகப்படுத்தி கவுரவப்படுத்தினார்.
பள்ளி ஆய்வாளர் பொன்னுசாமி, மாவட்ட திட்ட அலுவலர் சக்திவேல் மற்றும் ஸ்ரீ ராம் பள்ளியின் நிர்வாக இயக்குநர்கள், முதல்வர்கள், மற்றும் திட்ட அலுவலர்கள், பங்கேற்று மாணவர்களை வாழ்த்தினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்