search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிற்பள்ளி"

    • கலெக்டர் அரவிந்த் தகவல்
    • விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் அடுத்த மாதம் 28-ந்தேதி ஆகும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023-2024-ம் கல்வி ஆண்டிற்கு புதிய தொழிற் பள்ளிகள் தொடங்குதல், அங்கீ காரம் புதுப்பித்தல், தொழிற் பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற்பிரிவு களில் கூடுதல் அலகு தொடங்கு தல் ஆகிய வற்றிற்கான விண்ணப் பங்கள் இணையத ளம் மூலம் வரவேற்கப்படுகின்றன. கடந்த 2-ந்தேதி முதல் www.skiltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2023-2024-ம் கல்வி யாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண் ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது.

    விண்ணப்பிக்க உள்ள அனைத்து தொழிற்பிரி வுகள் மற்றும் கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வு கட்டணம் ஆர்.டி.ஜி. எஸ் மற்றும் நெப்ட் மூலம் செலுத்த அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம் ரூ.5 ஆயிரம் மற்றும் ஆய்வு கட்டணம் ரூ.8 ஆயிரம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் அடுத்த மாதம் 28-ந்தேதி ஆகும்.

    கூடுதல் விவரங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையரகம் தொலைபேசி எண்-044-2250 1006 (113) அல்லது detischennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது நாகர்கோவில், கோணம், அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் இயங்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04652-264463, 94799055804 என்ற எண்களிலோ தொடர்பு கொண்டு விவரம் தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×