search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்"

    • எல்.கே.ஜி. முதல் 4ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை தொடங்குவது குறித்து 6 வாரங்களுக்கு பின் முடிவெடுக்கப்படும்.
    • மாணவர்களின் அச்சத்தை போக்க இரு மருத்துவர்கள் உளவியல் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த ஜூலை 13-ந்தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை தொடர்ந்து பள்ளி முன்பு நடத்தப்பட்ட போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், பள்ளி பேருந்துகள், வகுப்புகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததை தொடர்ந்து பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.

    இதற்கிடையே பள்ளி மூடப்பட்டதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாகவும், விரைவாக பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்கவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் பள்ளி வளாகம் சீரமைக்கப்பட்டதால் பள்ளியில் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், கனியாமூர் பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதித்தனர். எல்.கே.ஜி. முதல் 4ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை தொடங்குவது குறித்து 6 வாரங்களுக்கு பின் முடிவெடுக்கப்படும் என்றனர்.

    இதனிடையே பள்ளி வரும் மாணவர்களின் அச்சத்தை போக்க இரு மருத்துவர்கள் உளவியல் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    ×