என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "செயல்திட்ட பயிற்சி"
- பாடத்திற்கான செயலியை வடிவமைத்தல் மற்றும் மதிப்பிடுதல்" என்ற தலைப்பில் பேசினார்.
- உடுமலை வட்டாரக் கல்வி அலுவலர் ஆறுமுகம் வாழ்த்தி பேசினார்.
உடுமலை :
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின்கீழ் இயங்கும் மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படிதிருப்பூர் மாவட்டம், திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும்பயிற்சி நிறுவனத்தின் சார்பாக மாவட்டம் சார்ந்த ஆராய்ச்சிச் செயல்திட்டத்திற்கான பணிமனை உடுமலை கச்சேரி வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் சரவணகுமார் 2022 –- 23 ஆம் கல்வி ஆண்டிற்கான மாவட்டம் சார்ந்த ஆராய்ச்சி செயல் திட்டத்தை "கற்றல் விளைவுகளில் திறன் அடைவைப்பெற தமிழ்ப் பாடத்திற்கான செயலியை வடிவமைத்தல் மற்றும் மதிப்பிடுதல்" என்ற தலைப்பில் பேசினார். அதன் ஒருபகுதியாக உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஆசிரியர்களுக்குக் கற்றல் விளைவுகள் அடிப்படையில் செயல்பாடுகள் மற்றும் மதிப்பீட்டு வினாக்கள் உருவாக்குதல் பணிமனை நடைபெற்றது.
அதனை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் தொடங்கி வைத்து கற்றல் விளைவுகளின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியர்களிடம் விளக்கிக் கூறினார். உடுமலை வட்டாரக் கல்வி அலுவலர் ஆறுமுகம் வாழ்த்தி பேசினார்.