search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சதிசிவனேஷ்"

    • போலீஸ் வேலைக்கு சேர்ந்த பின்னர் பயிற்சியின்போதுதான் துப்பாக்கியை கையில் எடுத்தேன்.
    • நான் நன்றாக துப்பாக்கி சுடுவதை பார்த்து உயர் அதிகாரிகள் எனக்கு ஊக்கம் கொடுத்தார்கள்.

    சென்னை:

    சிறந்த துப்பாக்கிச் சுடும் வீரர் போலீஸ்காரர் சதிசிவனேசுக்கு விழா மேடையில் பாராட்டுகள் குவிந்தது. அவருடன் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. ஜாங்கீட்டும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அவரோடு 'செல்பி' புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

    பின்னர் சதிசிவனேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எனது சொந்த ஊர் பழனி. எனது தந்தை ஓட்டல் நடத்தி வருகிறார். நான் சிவில் என்ஜினீயரிங் படித்துவிட்டு வேலை தேடி வந்தேன். கொரோனா காலத்தில் விளையாட்டாக போலீஸ் வேலையில் சேர்வதற்கு தேர்வு எழுதினேன். எனது பெற்றோர் எதிர்ப்பை மீறி நான் இந்த தேர்வை எழுதி வெற்றியும் பெற்றேன்.

    அதன் பின்னர் நான் கிடைத்த வேலையை விடக்கூடாது என்ற மன நிறைவோடு போலீஸ் வேலையில் சேர்ந்தேன். போலீஸ் வேலைக்கு சேர்ந்த பின்னர் பயிற்சியின்போதுதான் துப்பாக்கியை கையில் எடுத்தேன்.

    நான் நன்றாக துப்பாக்கி சுடுவதை பார்த்து உயர் அதிகாரிகள் எனக்கு ஊக்கம் கொடுத்தார்கள். முதன் முதலாக மாநில அளவில் நடந்த போட்டியில் நான் பங்கேற்றேன். அதில் எனக்கு வெற்றி கிடைக்கவில்லை. தற்போது நடந்த இந்த போட்டியில் என்னை நம்பிக்கையோடு உயர் அதிகாரிகள் பங்கேற்க வைத்தனர்.

    இது எனக்கு பெரியளவில் வெற்றியை தேடி கொடுத்துள்ளது. முதலமைச்சர் கையால் விருது பெற்றது எனக்கு பெருமையையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×