என் மலர்
நீங்கள் தேடியது "Prosecution"
- 28-ந் தேதி காடாம்புலியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது.
- மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் :
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது25), இவருக்கும் புதுப்பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 28-ந் தேதி காடாம்புலியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. பெற்றோர்கள் பாலு கருணாநிதி, ராஜ்மோகன் ஆகியோர் மீது குழந்தை திருமணம் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சமூக நல அலுவலர் தனபாக்கியம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து மகளிர் போலீசார் 3பேர் மீது வழக்கு பதிந்து சிறுமியை கடலூரில் உள்ள மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 1 கிலோ 100 கிராம் அளவில் இருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல்.
- போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை ரெயிலடி கிட்டப்பா பாலம் அருகில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அவரிடம், 1 கிலோ 100 கிராம் அளவில் இருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பிடிபட்டவர், மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு சிவன்கோவில் தெருவை சேர்ந்த வைத்தியநாதன் (வயது 58) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார் வைத்தியநாதனை கைது செய்தனர்.
- பெண்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இந்த வழக்கு தொடர்பாக மேலும் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை சேடப்பட்டியை அடுத்த வீராளம்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மனைவி ஜோதிமணி (வயது 36). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையில் ஏற்கனவே நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்தது.
சம்பவத்தன்று ஜோதி மணி வீராளம்பட்டி மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல், சரமாரியாக அடித்து உதைத்து தப்பி சென்றது. இது தொடர்பாக ஜோதிமணி, சேடப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த பாண்டி (31), சிவனாண்டி (60), தங்கேஸ்வரன் (29) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மதுரை திருமங்கலம் அடுத்த பன்னிகுண்டு, கிழக்கு தெருவை சேர்ந்தவர் போதும்பொண்ணு (வயது 50). இவரது கணவர் சந்திரன். இவர் அங்கு உள்ள ஒரு கோவிலில் மேளக்காரராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஒரு சிலர், கோவில் திருவிழா நிகழ்ச்சியின்போது முதல் மரியாதை கேட்டதாக தெரிகிறது. இதற்கு போதும்பொண்ணு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் 8 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கியது. படுகாயமடைந்த போதும்பொண்ணு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியில் வசிக்கும் பெரியபாண்டி, அவரது மகன் பால்பாண்டி, மகள் ஜோதி, பெரிய பாண்டி சகோதரர் சின்னபாண்டி, அவரது மனைவி பாப்பாத்தி, பெரியபாண்டி மனைவி பொன்னுத்தாய், நீலமேகம் மகள் மீனாட்சி ஆகிய 8 பேரிடம் சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தங்க சங்கிலியை காணாததை கண்டும் அதிர்ச்சி அடைந்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை கீழவாசல் ஆட்டு மந்தை தெருவில் படைவெட்டி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.
இந்த நிலையில் நேற்று இரவு கோவிலில் வழக்கமான பூஜைகள் முடிந்து நடை சாத்தப்பட்டது. இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கதவு திறந்து கிடப்பதை பார்த்தும், அம்மன் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை காணாததை கண்டும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர். அதில் நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து அம்மன் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சங்கராபுரம் அருகே டிராக்டர் மோதி முதியவர் பலியானார்.
- சங்கராபுரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மாரி (75). இவர் தனது இருசக்கர வாகனத்தில் சோழம்பட்டில் இருந்து சங்கராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். சேமபாளையம் தனியார் பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதியது. இதில் கீழே விழுந்த மாரி டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் அழகாபுரத்தை சேர்ந்த சந்துரு என்பவர் மீது சங்கராபுரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
- பொக்லைன் எந்திரம் மூலம் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதை அமைத்தனர்.
- அரசு பணி செய்யவிடாமல் தடுத்தும், கொலை மிரட்டல் விடுத்தார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே ஜவுளிகுப்பம் கிராமத்தில் வயல்வெளிக்கு செல்லும் பொதுப்பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக வருவாய்த்துறையினருக்கு புகார் சென்றது. அதன்பேரில் சங்கரா புரம் தாசில்தார் சரவணன் தலைமையில் வருவாய்த்து றை அதிகாரிகள், காவல் ஆய்வாளர் பாண்டியன், உதவி காவல் ஆய்வாளர் நரசிம்மஜோதி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட காவலர்கள் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதை அமைத்தனர்.
அப்போது அங்கு 10-க்கும் மேற்பட்டோருடன் வந்த அதே ஊரை சேர்ந்த சின்னகண்ணு மகன் பச்சையப்பன் அதிகாரிகளை திட்டி, அரசு பணி செய்யவிடாமல் தடுத்தும், கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பெரியார் கொடுத்த புகாரின்பேரில் பச்சையப்பன் உள்ளிட்ட 14 பேர் மீது சங்கராபுரம் போலீஸ் காவல் உதவி ஆய்வாளர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றார். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது சார் ஆய்வாளர் சுஜாதா, வருவாய் ஆய்வாளர் கல்யாணி, ஊராட்சி மன்ற தலைவர் அன்பு, ஒன்றிய கவுன்சிலர் தனவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அவரிடம் இருந்து 5 லிட்டர் ட சாராயத்தை கைப்பற்றினர்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே தகரை கிராமத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது தகரை கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மனைவி செல்வி என்பவர் தனது வீட்டில் சாராயம் விற்றார். அவரிடம் இருந்து 5 லிட்டர் ட சாராயத்தை கைப்பற்றினர். அவர் மீது வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்கள்.
- வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர்.
- மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்திருந்த யுவராஜ் தவறி சாலையில் விழுந்தார்.
திருவாரூர்:
திருவாரூர் அருகில் உள்ள செட்டிசிமிழியை சேர்ந்தவர் உலகநாதன் மகன் யுவராஜ் (வயது 20). இவர் கட்டட வேலை செய்து வந்தார்.
இவரும் இவரது நண்பர் அரவிந்த் (22) என்பவரும் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர்.
அப்போது கொரடா ச்சேரி அருகே ஒரு வேகத்தடையில் ஏறி இறங்கிய போது மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து இருந்த யுவராஜ் தவறி சாலையில் விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த யுவராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி யுவராஜ் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அப்துல் காதர் அவர்களை நேரில் பேச அழைத்துள்ளார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து பணமோசடியில் ஈடுபட்ட வீரசேகரன், முகேஷ் குமார் ஆகியோரை கைது செய்தனர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கடைதெரு செருபனையூர் சாலையில் மருத்துவமனை நடத்தி வருபவர் அப்துல் காதர். இவரின் மகன் டாக்டர் இம்ரான்கான் என்பவர் இந்த மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து வருகிறார்.
இந்த மருத்துவமனைக்கு கடந்த 29ந்தேதி முத்துப்பேட்டை தில்லைவிளாகம் கிராமத்தை சேர்ந்த பாலசுந்தரி காய்ச்சல் இருப்பதாக கூறி மருத்துவம் பார்த்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் ௩௦-ந்தேதி மருத்துவரின் தந்தை அப்துல் காதருக்கு செல்போனில் தொடர்புக்கொண்டு பேசிய ஒருவர் நேற்று அங்குவந்து மருத்துவம் பார்த்த பால சுந்தரி திடீரென இறந்து விட்டார்.
இதனால் உங்களை சும்மா விடமாட்டோம் என்று மிரட்டி உள்ளார். இதை நம்பிய அப்துல் காதர் அவர்களை நேரில் பேச அழைத்துள்ளார். இதைத் தொடர்ந்து சித்தமல்லி கிராமத்தை சேர்ந்த வீரசேகரன்(34), முகேஷ் குமார்(26) ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று அப்துல் காதரிடம் ரூ. 5லட்சம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்துல் காதர் ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்டு திரும்பிய இருவரும் இறுதி சடங்கு செய்துவிட்டு வந்து மீதி தொகை வாங்கி கொள்கிறோம் என்று கூறி சென்றுள்ளனர். பின்னர் மறுநாள் 11ந்தேதி மீண்டும் இருவரும் மருத்துவமனைக்கு வந்து மீதி 3 லட்சம் வேண்டும் என்று கேட்டு மிரட்டி ரூ.50ஆயிரம் அவரிடம் பெற்று சென்றனர்.
இதனால் மன உளைச்சல் அடைந்த அப்துல் காதர் தில்லைவிளாகத்தில் உள்ள நண்பரை தொடர்புக்கொண்டு இதுகுறித்து கூறி விசாரித்த போது பாலசுந்தரி இறந்து போகவில்லை என்று தெரிய வந்தது.
இது குறித்து அபதுல்காதர் முத்துபேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பணமோசடியில் ஈடுப்பட்ட வீரசேகரன், முகேஷ் குமார் ஆகியோரை கைது செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய பால சுந்தரியை போலீசார் தேடி வருகிறனர்.
- வீட்டில் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
தஞ்சாவூர்:
தஞ்சை விளார் ரோடு அருள் நகரை சேர்ந்தவர் ஆனந்த் எட்வின் ( வயது 33) . சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் பக்கம் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 11 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தது. மர்ம நபர்கள் இந்த கைவரிசையை காண்பித்தது தெரியவந்தது.
இது குறித்த அவர் தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ரூ. 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் பட்டு புடவைகள் ஆகியவை திருட்டு.
- நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
நீடாமங்கலம்:
திருவிடைமருதூர் உட்கோட்டம், நாச்சியார்கோவில் காவல் சரகத்திற்குட்பட்ட பழவாத்தான்கட்டளை, பாரதி நகர் தெற்கு, நேதாஜி தெருவை சேர்ந்தவர் முகில் (வயது 38).
இவர் தனது மனைவி மற்றும் தாயுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு மாடியில் தூங்க சென்றுள்ளார்.
இந்நிலையில், காலை வீட்டின் கீழ் பகுதியில் வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கேட் மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டிருந்து.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் தங்க செயின் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் பட்டு புடவைகள் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செல்வகுமார், முருகன், ஆனந்த் ஆகியோருடன் சென்று குடிசைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
- ஜெயக்குமார் இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் நகராட்சியில் 1- வது வார்டில் உச்சினி மாகாளியம்மன் கோவில் தெரு உள்ளது. இங்கு சுமார் ஆயிரம் வீடுகள் உள்ளன. இங்கு பெரும்பாலானோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இங்குள்ளவர்களில் பலர் அருகில் உள்ள சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் சுமார் 300 குடிசைகளை அமைத்திருந்தனர். ஆனால் இது ஆக்கிரமிப்பு எனவும் புகார் எழுந்தது.இந்த நிலையில் அப்பகுதியின் வார்டு கவுன்சிலர் மாரீஸ்வரி என்பவரின் மகனான செல்வகுமார் தனது நண்பர்களான முருகன், ஆனந்த் ஆகியோருடன் சென்று ஜே.சி.பி எந்திரத்தின் மூலம் நேற்று முன்தினம் அங்குள்ள குடிசைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இந்த நடவடிக்கையை கண்டித்து அப்பகுதி மக்கள் கூடினர். பள்ளிக்கூடம் அருகில் குப்பையை கொட்ட கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது செல்வகுமார், நான் இப்பகுதி கவுன்சிலர். குப்பைகளை கொட்டுவதற்காக இந்த இடத்தை சரி செய்து கொண்டிருக்கிறேன். இதை யாரும் தடுக்க முடியாது. மீறினால் அவர்களின் அடிப்படை உரிமைகளை ரத்து செய்துவிடுவேன். இதற்கு மேலும் பேசினால் கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து அப்பகுதி ஊர் நல கமிட்டி பொறுப்பாளரான ஜெயக்குமார் நேற்று ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார்.இதன் பேரில் செல்வகுமார், முருகன், ஆனந்த் ஆகிய 3பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.