search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடியரசு தின பாதுகாப்பு பணி"

    • ரெயில் நிலையம், கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பு
    • குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடக்கிறது.

    விழாவில் கலெக்டர் அரவிந்த் தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார். இதைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துடன் சென்று பார்வையிடும் கலெக்டர் அரவிந்த் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

    விழாவில் மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. குடியரசு தினத்தையொட்டி போலீசாரின் அணி வகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் இன்று நடந்தது. ஊர்க்கா வல் படையினர், ஆயுதப் படையினர், தேசிய மாணவர் படையினர், இந்த அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    குடியரசு தினத்தை யொட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.இதற்கான ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.

    குடியரசு தின விழா நடைபெறும் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மைதானம் முழுவதும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. மாநகராட்சி ஊழியர்கள் அந்த பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அங்கு பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    குடியரசு தினத்தை யொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட அறிவு றுத்தப்பட்டு உள்ளனர். மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். அங்கு கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆரோக்கியபுரம் முதல் நீரோடி காலணி வரை உள்ள கடற்கரை கிராமங்களி லும் பாதுகாப்பு பலப்ப டுத்தப்பட்டு உள்ளது. கடலோர காவல் படை போலீசாரும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பை பலப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி, நாங்கு நேரி, வள்ளியூர், இரணி யல், குழித்துறை ரெயில் நிலையங்களிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குமரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோவில்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    ×