search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூதலிங்கசாமி"

    • வேத மந்திரங்களை சிவாச்சாரியார்கள் முழங்கினார்கள். பக்தர்கள் பலரும் பங்கேற்றனர்
    • பூதலிங்க சுவாமி, சிவகாமி அம்மாள், பூதநாதர், சாஸ்தா, முருகர், ராஜ கோபுரம் மற்றும் நுழைவு வாயில் பகுதியில் உள்ள ராஜகோபுரங்களில் புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்றினார்கள்

    நாகர்கோவில் :

    பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழாவை யொட்டி கடந்த 22-ந் தேதி பூஜைகள் தொடங்கியது.

    முதல் காலயாக சாலை பூஜை, இரண்டாம் காலயாக சாலை பூஜை, 3-ம் கால யாகசாலை, பூஜை 4-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. மேலும் தினமும் பரதநாட்டியம் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியும் நடந்து வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது.

    இதையடுத்து அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.பின்னர் 5-ம் கால யாகசாலைபூஜை நடந்தது. வேத மந்திரங்களை சிவாச்சாரியார்கள் முழங்கினார்கள். பக்தர்கள் பலரும் பங்கேற்றனர். இதை தொடர்ந்து பூஜைக்கு குடங்களில் வைக்கப்பட்டிருந்த புனித நீர்களை சிவாச்சாரியார்கள் எடுத்து சென்றனர். புனித நீர் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    பின்னர் பூதலிங்க சுவாமி, சிவகாமி அம்மாள், பூதநாதர், சாஸ்தா, முருகர், ராஜ கோபுரம் மற்றும் நுழைவு வாயில் பகுதியில் உள்ள ராஜகோபுரங்களில் புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்றினார்கள். அப்போது பக்தர்கள் ஓம் நமச்சிவாயா...ஓம் நமச்சிவாயா... என்று பக்தி கோஷம் முழங்க கோஷமிட்டனர். அப்போது வானில் கருடர் வட்டமிட்டு பறந்தது.இதைத் தொடர்ந்து சிவாச் சாரியார்கள் பக்தர்கள் மீது புனித நீர் தெளித்த னர். இதை தொடர்ந்து கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

    கும்பாபிஷேக விழாவில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் மகேஷ், இணை ஆணையர் ஞானசேகர், தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் பூதலிங்கம், ஆரல்வாய்மொழி பேரூ ராட்சி தலைவர் முத்துக் குமார், பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர்தாஸ், துணை தலைவர் அணில்குமார், தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்வன், துணை செயலாளர் கரோலின் ஆலிவர்தாஸ், தோவாளை ஒன்றிய அ.தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் பாசறை இணை செயலாளர் பகவதியப்பன், இறச்சகுளம் ஊராட்சி தலைவர் நீலகண்ட ஜெகதீஷ், பாரதிய ஜனதா விளையாட்டுப்பிரிவு மாவட்ட செயலாளர் ரெங்கநாதன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு செயலாளர் விஜய்மணியன், பூதப்பாண்டி பேரூராட்சி கவுன்சிலர் ஈஸ்வரி மற்றும் முத்துகுமார் உள்பட ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பூதப்பாண்டி சுற்று வட்டார பகுதியில் இருந்து மட்டுமே குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவை காண வந்திருந்தனர்.

    23 ஆண்டுகளுக்குப் பிறகு பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவிலில் கும்பாபி ஷேகம் நடைபெற்றதை யடுத்து அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டி ருந்தது. நாகர்கோவில், வடசேரி பகுதியிலிருந்து பூதப்பாண்டிக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு இருந்தனர். இன்று இரவு கோவிலில் திருக்கல் யாண நிகழ்ச்சி நடக்கிறது.

    ×