search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்காச்சோளம் அறுவடை"

    • கறிக்கோழி பண்ணைகள் அதிகம் உள்ளதால் மக்காச்சோள தேவையும் அதிகம்.
    • மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதல் அதிகம் இல்லை.

    பல்லடம் :

    பல்லடம் சுற்று வட்டாரத்தில் விவசாயம் முக்கியதொழிலாக உள்ளது. சோளம், மக்காச்சோளம், காய்கறிகள், வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்தப்பகுதியில் கறிக்கோழி பண்ணைகள் அதிகம் உள்ளதால் மக்காச்சோள தேவையும் அதிகம். உள்ளூர் விளைச்சலில் பற்றாக்குறை உள்ளதால் பிற மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

    தற்போது பல்லடம் பகுதியில் மக்காச்சோளம் அறுவடை நடக்கிறது. உள்ளூர் விவசாயிகள் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். அல்லாளபுரத்தை சார்ந்த விவசாயி செந்தில்குமார் கூறியதாவது:-

    பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த காலத்தில் ஏற்பட்டது போல் மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதல் அதிகம் இல்லை. இதனால் மக்காச்சோள உற்பத்தி பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

    ஆனால் இடுபொருட்கள், உரம், மருந்து ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. ஆனால் மக்காச்சோளத்திற்கு உரிய விலை இல்லை. மக்காச்சோளம் ஒரு குவின்டால் தற்போது ரூ. 2,000 வரை விவசாயியிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. இது ரூ.2,500க்கு கொள்முதல் செய்தால் ஓரளவுக்கு விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×