என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கலாநிதி வீராசாமி"
- பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இங்கு இடம்பெறுகின்றன.
- மத்திய அரசிடம் குடியுரிமை வேண்டி போராடி வருகிறார்கள்.
சென்னை:
சென்னை செம்மொழி பூங்காவில் 'ஊரும் உணவும்' என்ற பெயரில் புலம் பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழாவை திமுக எம்.பிக்கள் கனிமொழி, கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஒவ்வொரு அரங்கையும் பார்வையிட வேண்டும் என்று புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் கோரிக்கை வைத்தனர்.
புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் கோரிக்கை ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு அரங்கையும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கலாநிதி வீராசாமி ஆகியோரும் பார்வையிட்டனர்.
பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியிருப்பதாவது:-
"இந்த உணவுத் திருவிழாவின் முக்கிய நோக்கம்நம் நாட்டில் உள்ள புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் ஆகும்" .
புலம்பெயர்ந்து இந்தியா வந்த மக்கள் சில சவால்களை இன்னும் சந்தித்து வருகிறார்கள். மத்திய அரசிடம் குடியுரிமை வேண்டி போராடி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று முதல் வரும் 7ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இங்கு இடம்பெறுகின்றன. இத்திருவிழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.
- ரூ. 1.90 கோடி மதிப்பீட்டில். 2 மாடியில் 6 வகுப்பறை கட்டிடங்கள் நவீன வசதியுடன் கட்டப்பட்டது.
- மாணவர்கள் அமர்ந்து படிக்க நவீன மேஜை நாற்காலிகள் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளன.
திருவொற்றியூர்:
மணலி, பாடசாலை தெருவில் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் போதிய வகுப்பறை வசதிகள் இல்லாததால் கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தர வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வட சென்னை எம்.பி. கலாநிதி வீராசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.
இதைத்தொடர்ந்து தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 1.90 கோடி மதிப்பீட்டில். 2 மாடியில் 6 வகுப்பறை கட்டிடங்கள் நவீன வசதியுடன் கட்டப்பட்டது. மாணவர்களை பெரிதும் கவரும் வகையில் பல வண்ணங்களில் விமானம், வந்தே பாரத் ரெயில், இஸ்ரோ ராக்கெட் என வகுப்பறைமுகப்புகளில் வரையப்பட்டு தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் அமர்ந்து படிக்க நவீன மேஜை நாற்காலிகள் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளன. இதனை மாணவர்கள் பயன்பாட்டிற்காக டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.பி. திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் ஏ.வி. ஆறுமுகம், வடக்கு மண்டல துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், தலைமை ஆசிரியர் கோமளீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இந்தி மொழி நம் நாட்டில் அலுவல் மொழியாக இருப்பதைப் போல, தமிழ் மொழியையும் அலுவல் மொழியாக அறிவிப்பு வெளியிடலாமே.
- உலகில் சில ஆயிரம் மக்கள் மட்டுமே பேசக்கூடிய சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு, தாங்கள் ஒதுக்கி செய்யும் நிதி அளவிற்குத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் உடனடியாக நிதியை அதிகரித்து அறிவிக்க வேண்டும்.
ராயபுரம்:
வடசென்னை தொகுதி எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மொழிகளைப் பற்றி விவாதம் நடக்கும் போதெல்லாம், நீங்கள் உலகிலேயே மிகவும் மூத்த மொழி தமிழ் என்றும் அது எங்கள் நாட்டைச் சேர்ந்தது என்றும் பெருமையுடன் கூறுவதைக் கேட்டு, தமிழர்களாகிய நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம்.
இந்தி மொழி நம் நாட்டில் அலுவல் மொழியாக இருப்பதைப் போல, தமிழ் மொழியையும் அலுவல் மொழியாக அறிவிப்பு வெளியிடலாமே. அவ்வாறு தங்களைச் செய்ய விடாமல் ஏதேனும் ஒரு சக்தி தடுக்கின்றதா என்று எனக்கு தெரியவில்லை.
தமிழ் மொழியைப் பற்றி தாங்கள் கூறும் கருத்துக்கள் உங்களது இதயத்தில் இருந்து வருமானால், இந்த உலகில் சில ஆயிரம் மக்கள் மட்டுமே பேசக்கூடிய சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு, தாங்கள் ஒதுக்கி செய்யும் நிதி அளவிற்குத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் உடனடியாக நிதியை அதிகரித்து அறிவிக்க வேண்டும்.
மேலும், அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் தமிழ் மொழியை மூன்றாவது மொழியாக கற்பிக்கும் வகையில், அதாவது தாய்மொழி, இந்தி அல்லது ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியைக் கற்பிக்கக் கூடிய வகையில் உடனடியாக ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அரசு ஆணையாவது வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- விபத்தில் பாதிக்கப்பட்டு உள்ள சில ரயில் பயனாளிகள் ரயில்வே மீட்பு குழுவினர் தாமதமாக வந்ததாக தெரிவித்து உள்ளனர்.
- சென்னை-கல்கத்தா ரயில் மார்க்கம் மிக அதிக அளவு பயன்படுத்தப்படும் மார்க்கமாகும்.
ராயபுரம்:
வடசென்னை எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்வுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :
ஒரு இந்தியக் குடிமகனாகவும், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்னும் நிலையிலும் பல உயிர்களை இழந்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காயமுற்று, துயரமுடன் இருக்கும் இந்த வேளையில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் விபத்தினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இந்த பேரிடரால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரத்திலும் பங்கேற்கின்றேன்.
இந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தாலும் செய்ய தயாராக உள்ளேன். வழக்கம் போல, இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் போது, மாநில அரசும், விபத்து ஏற்பட்ட பகுதி வாழ் கிராமங்களும் ஓடோடி வந்து முதலில் உதவிகரங்கள் நீட்டி உள்ளனர்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு உள்ள சில ரயில் பயனாளிகள் ரயில்வே மீட்பு குழுவினர் தாமதமாக வந்ததாக தெரிவித்து உள்ளனர்.
இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் போது, விரைந்து செயல்படுவது எப்படி என்று மீட்புக்குழு வினருக்கு, ரயில்வே துறையின் வழிகாட்டுதல் முறைப்படி, அவர்களுக்கு தக்க பயிற்சிகள் காலமுறைப்படி வழங்கப்பட்டுள்ளதா, என்பதை தாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். ஒரு வேளை இல்லையெனில், அவர்களுக்கு தக்க பயிற்சிகள் வழங்க ஆணையிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை-கல்கத்தா ரயில் மார்க்கம் மிக அதிக அளவு பயன்படுத்தப்படும் மார்க்கமாகும். அதிக மக்கள் பயணம் செய்வதால், இந்த மார்க்கத்தில் உள்கட்டமைப்பை உடனடியாக வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். மேலும் பயனாளிகள், கோரமண்டல் விரைவு ரயிலில் வருவதால், அதிகப்படியான பயனாளிகள் முன்பதிவு செய்வதாலும், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் அதிகமான அளவில் பயனாளிகள் பயணிப்பதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இந்த மார்க்கத்தில் மேலும் சில புதிய ரயில்களை விட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- வடசென்னை பாராளுமன்ற உறுப்பினராக டாக்டர் கலாநிதி வீராசாமி பணியாற்றி வருகிறார்.
- கலாநிதி வீராசாமி தனது பெயரில் இதுபோன்ற இன்ஸ்டாகிராம் கணக்கு இல்லை என்பதால் யாரும் பணம் அனுப்பாதீர்கள் என தெரிவித்தார்.
சென்னை:
வடசென்னை பாராளுமன்ற உறுப்பினராக டாக்டர் கலாநிதி வீராசாமி பணியாற்றி வருகிறார். அண்மையில் இன்ஸ்டாகிராமில் இவரது பெயரில் போலி கணக்கு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. டாக்டர் கலாநிதி வீராசாமி படமும் அதில் வைக்கப்பட்டுள்ளது. அதை உண்மை என நம்பிய சிலர் அந்த கணக்கில் இணைந்துள்ளனர்.
திடீரென அந்த போலி கணக்கை ஆரம்பித்த மர்ம நபர் தனக்கு வங்கியில் சர்வர் பிராப்ளம் இருப்பதால் அவசரமாக பணம் தேவைப்படுவதாக குறுஞ்செய்தி அனுப்பி கூகுள் பே நம்பரை அனுப்பியுள்ளார். பலருக்கு இதுபோல் பணம் கேட்டு தகவல் அனுப்பி உள்ளார். இதுகுறித்து தெரிய வந்ததும், கலாநிதி வீராசாமி தனது பெயரில் இதுபோன்ற இன்ஸ்டாகிராம் கணக்கு இல்லை என்பதால் யாரும் பணம் அனுப்பாதீர்கள் என தெரிவித்தார்.
ஆனால் தொடர்ந்து போலி இன்ஸ்டாகிராம் கணக்கு இயங்குவதால் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். இதுபற்றி சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்