என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாஸ்டன் தடகளம்"
- தேஜஸ்வின் சங்கர் தனது முதல் முயற்சியில 2.14 மீட்டர் தூரம் தாண்டினார்.
- கடந்த 2022-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தேஜஸ்வின் வெண்கல பதக்கம் பெற்று இருந்தார்.
பாஸ்டன்:
அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில் பாஸ்டன் நியூபேலன்ஸ இன்டோர் கிராண்ட் பிரீ தடகள போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்ற இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் தங்கப்பதக்கம் பெற்று முத்திரை பதித்தார். அவர் 2.26 மீட்டர் தாண்டினார்.
முன்னாள் உலக சாம்பியனும், காமென்வெல்த் விளையாட்டில் தங்கம் பெற்ற வருமான பகாமசின் டொனால்ஸ் தாமசை பின்னுக்கு தள்ளி தேஜஸ்வின் சங்கர் தங்கம் வென்றார். டொனால்ட் 2.23 மீட்டர் தாண்டினார்.
தேஜஸ்வின் சங்கர் தனது முதல் முயற்சியில 2.14 மீட்டர் தூரம் தாண்டினார். அதை தொடர்ந்து 2.19, 2.23, 2.26 மீட்டர் தாண்டினார். அவரது 4-வது முயற்சியில் தான் முதல் இடத்தை பிடிக்க முடிந்தது.
கடந்த 2022-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தேஜஸ்வின் வெண்கல பதக்கம் பெற்று இருந்தார். வெளியரங்க மைதானத்தில் சங்கர் அதிகபட்சமாக 2.29 மீட்டர் உயரம் தாண்டி இருந்தார்.
அமெரிக்காவின் டேரில் சல்விவன் 2.19 மீட்டர் தாண்டி வெண்கலம் வென்று இருந்தார்.