search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.3 லட்சம் கடன்"

    • 2 ,பேரும் நண்பர்கள். இதில் ஸ்டாலினுக்கு அவசரமாக 3 லட்ச ரூபாய் தேவைப்பட்டுள்ளது
    • இருந்த போதும் 3 லட்ச ரூபாய் பணம் திருப்பி வழங்கப்படவில்லை

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை எலவனாசூர் கோட்டையைச் சேர்ந்தவர்கள் ஏழுமலை (வயது 40), ஸ்டாலின் (42). 2 பேரும் நண்பர்கள். இதில் ஸ்டாலினுக்கு அவசரமாக 3 லட்ச ரூபாய் தேவைப்பட்டுள்ளது. தனது நண்பரான ஏழுமலையிடம் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என்று கூறவே யாரிடமாவது வாங்கி கொடுக்க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.அதே பகுதியில் வசிக்கும் மதினா (30) என்பவரிடம் 3 லட்ச ரூபாய் கடன் வாங்கி ஸ்டாலினிடம் ஏழுமலை கொடுத்தார். இதையடுத்து ஸ்டாலின் மாதா மாதம் வட்டி கட்டவில்லை எனத் தெரிகிறது. எனவே, கடன் தொகையை திருப்பித் தருமாறு ஸ்டாலினிடம் மதினா கேட்டுள்ளார். இதற்கு ஸ்டாலின் சரியாக பதில் தராமல் பணத்தை திருப்பித் தரவில்லை. இதையடுத்து மதினா இது தொடர்பாக ஏழுமலையிடம் கூறினார். ஸ்டாலினிடம் பேசி பணத்தை திருப்பி வாங்கித் தருவதாக கூறுகிறார். இருந்த போதும் 3 லட்ச ரூபாய் பணம் திருப்பி வழங்கப்படவில்லைஇ.ந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த பா.ம.க. பிரமுகர் ஜெகனிடம் நடந்த சம்பவங்களை மதினா கூறியுள்ளார். இது குறித்து பேச வேண்டும் எனது கடைக்கு வா என்று ஏழுமலையை, ஜெகன் அழைத்துள்ளார். இதையேற்று ஏழுமலை அங்கு சென்றார். அப்போது ஏழுமலைக்கும் மதினாவின் உறவினராக ஜாகீர் உசேன் (49) என்பவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அருகிலிருந்த இரும்பு கம்பியை எடுத்து ஏழுமலையின் தலையில் ஜாகீர் உசேன் ஓங்கி அடித்தார்.தலையில் பலத்த காயமடைந்த ஏழுமலை உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் ஜாகீர் உசேன், ஜெகன் மீது வழக்கு பதிவு செய்தனர். ஜாகீர் உசேனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×