என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சதுர்த்தி வழிபாடு"
- துன்பங்கள், தடைகள் நீங்க வேண்டும் என நினைப்பவர்கள் தேய்பிறையில் வரும் சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்யலாம்.
- ஆலயத்தை எட்டு முறை வலம் வர வேண்டும்.
முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விரத நாள் சதுர்த்தி ஆகும். மாதத்தில் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு சதுர்த்தி திதிகள் வருவதுண்டு.
இவற்றில் தேய்பிறையில் வரும் சதுர்த்தியை, சங்கடஹர சதுர்த்தி என சொல்வதுண்டு. இந்த நாளிலேயே பெரும்பாலானவர்கள் விநாயகரை விரதம் இருந்து, வழிபடுவது உண்டு. துன்பங்கள், தடைகள் நீங்க வேண்டும் என நினைப்பவர்கள் தேய்பிறையில் வரும் சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்யலாம்.
அதே சமயம் வாழ்க்கையில் வளம், நலம் பெருக வேண்டும், வளர்ச்சிகள் ஏற்பட வேண்டும், நன்மைகள் பெருக வேண்டும், மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என நினைப்பவர்களை விநாயகரை வளர்பிறையில் வரும் சதுர்த்தியில் வழிபடுவது சிறப்பானதாகும்.
அமாவாசைக்கு அடுத்த நாளில் இருந்து நான்கு நாட்களில் வரும் திதியை வளர்பிறை சதுர்த்தி. இந்நாளில் வீட்டில் பூஜை செய்து அருகில் உள்ள விநாயகர் சந்நதிக்கு சென்று விநாயகரை மனமுருகி வணங்கி வழிபட வேண்டும். அப்போது விநாயகரின் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். வழிபாடு முடிந்த உடன் ஆலயத்தை எட்டு முறை வலம் வர வேண்டும். இவ்வாறு வழிபாடு செய்து வர விநாயகப் பெருமானின் அருள் ஆசி கிட்டும்..
- கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- ஏற்பாடுகளை அந்த பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் வளாக விநாயகர் கோவில், எல். கே. சி. நகர் புற்றுக்கண்ஆனந்த விநாயகர் கோவில், திருவள்ளுவர் நகர் விநாயகர் கோவில், சக்தி நகர் விநாயகர் கோவில், குமாரவலசு விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம்,பூ அபிஷேகம்,தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அந்த பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்