search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்றவர் கைது"

    • சந்தன மரம் வெட்டி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
    • இதுதொடர்பாக தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பொட்டுமடம் பகுதியில் பரமசிவம் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு வேலியோரம் சந்தன மரங்களை வளர்த்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு எருமலை நாயக்கன்பட்டியை சேர்ந்த மூர்த்தி என்பவர் வேலைக்கு சேர்ந்தார். தோப்பில் சந்தன மரம் இருப்பதை பார்த்த அவர் அதனை வெட்டி கடத்த முடிவு செய்தார். அதன்படி தனது நண்பர்கள் அழகர்சாமிபுரத்தை சேர்ந்த கழுதை பாலு, மேலும் ஒருவருடன் சேர்ந்து அதற்கான திட்டம் போட்டனர்.

    அதன்படி 3 பேரும் தென்னந்தோப்பில் இருந்து சந்தன மரங்களை வெட்டி சிறு கட்டைகளாக கடத்தி செல்ல முயன்றனர். அப்போது அவ்வழியாக வந்த பெரியகுளம் விவசாயபுரவு காவல் சங்கத்தை சேர்ந்த உதயன் என்பவர் வந்ததை கண்டு கழுதை பாலு மற்றும் அவரது நண்பர் தப்பி ஓடிய நிலையில் பிடிபட்ட மூர்த்தியை பெரியகுளம் போலீசில் ஒப்படைத்தார்.

    அவரிடம் இருந்து சந்தன கட்டைகள், கோடாரி, பைக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பெரியகுளம் போலீசார் மூர்த்தியை தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் டேவிட்ராஜிடம் ஒப்படைத்த னர்.

    வனத்துறையினர் சந்தன மரம் வெட்டிய வழக்கில் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

    பெரியகுளம் பகுதியில் கடந்த சில நாட்களில் மட்டும் 20க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டன. தற்போது மேலும் ஒருவர் சிக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×