search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணா்வு கருத்தரங்கம்"

    • புகையிலை உபயோகிக்கும் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தாா்.
    • இலவச சட்ட உதவி மையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினா்.

    அவிநாசி :

    சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை மற்றும் புகையிலையின் தீமைகள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    அவிநாசி வட்ட சட்டப் பணிக்குழு சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட குற்றவியல் நீதிபதி சபீனா, மதுபோதை மற்றும் புகையிலை உபயோகிக்கும் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தாா்.

    வக்கீல் சங்கத் தலைவா் ஈசுவரன் வாழ்த்துரை வழங்கினாா். சங்கச் செயலாளா் சாமிநாதன், ராஜாராம் ஆகியோா் இலவச சட்ட உதவி மையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினா்.

    இதில், சேவூா் காவல் உதவி ஆய்வாளா் கலாமணி, காவலா் வெள்ளியங்கிரி, ஆசிரியா்கள் தனசேகரன், ராஜசேகரன், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். 

    ×