search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீர்த்தக்குட ஊர்வலம்"

    • கும்பாபிஷேகம் வருகிற 2-ந்தேதி காலை நடக்கிறது.
    • முதல்கால வேள்வி பூஜை இன்று நடக்கிறது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான கோவில் போன்ற பல்வேறு சிறப்பு வாய்ந்த கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 2-ந்தேதி காலை நடக்கிறது.

    கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று இ்ரவு 7 மணிக்கு முதல்கால வேள்வி பூஜை நடக்கிறது. முன்னதாக கடந்த 24-ந்தேதி மூத்த பிள்ளையார் வழிபாடும், கணபதி ஹோமமும் நடந்தது. இதையடுத்து 25-ந்தேதி சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் முன்னிலையில் லஷ்மி ஹோமம் ஸ்ரீசூத்தம் ஜபம் நடந்தது.

    இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு தல காவிரி தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கடந்த சனிக்கிழமை அவிநாசியில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் கர்நாடக மாநிலம் தலைக்காவேரி சென்ற நிலையில் அங்கு தீர்த்தம் எடுத்து இன்று அதிகாலை அவிநாசி வந்தடைந்தனர்.

    இதனை தொடர்ந்து அவினாசி வீர ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேர் வலம் வரும் ரத வீதிகளின் வழியாக 500-க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர். தீர்த்தக் கூட ஊர்வலத்துக்கு முன்பு மேளதாளங்கள் முழங்க இசைக்கேற்றவாறு குதிரை நடனமாட பெண்கள் தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    இதில் அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோவிலுக்கு வந்தடைந்த தீர்த்தர்கள் கும்பாபிஷேகத்தன்று அவிநாசிலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட உள்ளது.

    காலை 9 மணிக்கு வேள்விச்சாலை அழகு பெறச் செய்து தூய்மை செய்தல் பணி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு திருக்குடங்களில் திருவருட்சத்திகளை ஏற்றி வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு திருக்குடங்கள் வேள்விச்சாலைக்கு எழுந்தருளி ஆனந்தம் அருளும் அவினாசியப்பருக்கு முதல்கால வேள்வி பூஜை தொடங்குகிறது. நாளை காலை 9 மணிக்கு 2-ம் காலமுறை விண்ணப்பம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    காலை 10 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு எண்வகை மருந்து சாத்துதல் நடக்கிறது. மாலை 6 மணிக்கு 3-ம் கால வேள்வி பூஜை , பேரொளி வழிபாடு ஆகியவை நடக்கிறது.

    31-ந்தேதி காலை 6 மணிக்கு 4-ம் கால வேள்வி, மாலை 6 மணிக்கு 5-ம் கால வேள்வியும், 1-ந்தேதி காலை 6 மணிக்கு 6-ம் கால வேள்வியும் நடக்கிறது.அன்று காலை 10 மணிக்குள் அவினாசியப்பர் துணை நிற்கும் தெய்வங்களுக்கு கும்பாபிஷேக பெருவிழாவும், மாலை 6 மணிக்கு 7-ம் கால வேள்வி 108 மூலிகை பொருட்கள் வேள்வி ஆகியவை நடக்கிறது.

    வருகிற 2-ந்தேதி காலை 8-ம் கால வேள்வி பூஜை, திருமுறைவிண்ணப்பம், பேரொளி ஆராதனை ஆகியவை நடக்கிறது. காலை 8 மணிக்கு திருக்குடங்கள் ஞான உலா நிகழ்ச்சியும், 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது.

    அன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும், 8 மணிக்கு அவினாசி அப்பருடன் ஐம்பெரும் தெய்வங்களும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

    • 35-ம் ஆண்டு மஹா சிவ ராத்திரி திருவிழாவை முன்னிட்டு புனித தீர்த்தக்குடம் ஊர்வலம் நடைபெற்றது.
    • தொடர்ந்து நேற்று காலை கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், நடந்தது.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் திருவள்ளுவர் நகர் பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் 35-ம் ஆண்டு மஹா சிவ ராத்திரி திருவிழாவை முன்னிட்டு புனித தீர்த்தக்குடம் ஊர்வலம் நடைபெற்றது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித தீர்த்தக்குடம் ஊர்வலம் பெண்ணாகரம் காவேரி ரோடு,கடைவீதி,பழைய பேருந்து நிலையம்,முள்ளுவாடி, புதிய பேருந்து நிலையம் வழியாக ஊர்வலமாக சென்று திருவள்ளுவர் நகரில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் நிறைவு பெற்றது.

    தொடர்ந்து நேற்று காலை கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், இரவு மயான கொள்ளை பூஜையும் ,நாளை மறுநாள் திங்கட்கிழமை காலை அலகு குத்துதல் நிகழ்ச்சியும், தேரோட்டமும் நடக்க உள்ளது.

    ×