search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்துச்சாவு"

    • 3 பிரிவினருக்கும் ஒரே மாதிரியான மாவு மட்டுமே வழங்கப் பட்டது.
    • தனித்தனியாக வேறு வேறு பாக்கெட்களில் வழங் கப்பட உள்ளது.

    தாராபுரம் :

    கர்ப்பிணிகள், தாய்மார்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுப்பதற்கான அரசின் திட்டமாக சத்துமாவு வழங்கப்படுகிறது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் அங்கன்வாடிகளில் இதுவரை 3 பிரிவினருக்கும் ஒரே மாதிரியான மாவு மட்டுமே வழங்கப்பட்டது.

    பல்வேறு வகையான தானியங்கள், குழந்தைகள் விரும்பி உண்பதற்காக வெல்லமும் இந்த மாவில் சேர்க்கப்பட்டுள்ளது.தற்போது 3பிரிவினருக்கும் ஒரே மூலப்பொருட்கள், ஆனால் வேறுவேறு அளவுகளில் சேர்க்கப்பட்டு புதிய வகையான மாவு தயாரிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கூறியதாவது:- கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதை கட்டுப்படுத்த மாவில் வெல்லத்தின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.6 மாதம் முதல் 2 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு தனியாகவும், 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தனி சுவை சேர்த்தும், தனித்தனியாக வேறு வேறு பாக்கெட்களில் வழங்கப்பட உள்ளது.

    ஒவ்வொரு பிரிவினரும் மாவை எந்த அளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கும் பயனாளிகளுக்கு ஒரு ஸ்பூன் மற்றும் கன்டெய்னர் வழங்கப்படுகிறது. அங்கன்வாடி பணியாளர்களால் வழங்கப்படும் ஸ்பூனில் எவ்வளவு மாவு எடுக்க வேண்டுமென தாய்மார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் கூறுவார்கள். ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவதற்கு இந்த வகையில் மாவு வினியோகிக்கப்படுகிறது. அரசின் உத்தரவுக்குப்பின் மாவு பயனாளிகளுக்கு வினியோகிக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×