search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருப்பு துணி"

    • சிவகங்கை அருகே வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடந்தது.
    • போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    சிவகங்கை

    சிங்கம்புணரி சிங்கம்புணரி அடுத்த அ.காளாப்பூரில் உள்ளது எட்டுக்கரை பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட கொக்கன் கருப்பர் கோவில். இக்கோவில் இடம் அரசுக்கு சொந்தமானது எனவும், நீதிமன்றம் கட்டுவதற்காக பணிகளை அரசு தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிந்த எட்டுக்கரை பங்காளிகள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். நேrற்று முன்தினம் வருவாய் துறையினர் அளவிடும் பணியை மேற்கொண்டபோது எட்டுக்கரை பங்காளிகள் அங்கு சென்று பணியை நிறுத்தக்கோரி மறியலில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    • பொதுமக்கள் பூமி பூஜை நடைபெறும் இடத்திற்கு செல்லாதவாறு தடுப்புகள் அமைத்து பொதுமக்களை தடுத்தனர்.
    • 80 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி 8-வது வார்டு பச்சாபாளையம் மயான பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.145 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பல்லடம் நகராட்சி தரப்பில் பூமிபூஜை நடைபெற்றது. ஏற்கனவே நவீன எரிவாயு தகன மேடை அமைக்க அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பியும், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில் எரிவாயு தகன மேடை அமைக்க பூமி பூஜை நடத்துவதை கண்டித்து கண்களில் கருப்பு துணி கட்டி சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த இடத்தில் திரண்டனர்.

    இதையடுத்து அந்தப்பகுதியில் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு, பொதுமக்கள் பூமி பூஜை நடைபெறும் இடத்திற்கு செல்லாதவாறு தடுப்புகள் அமைத்து பொதுமக்களை தடுத்தனர். இதனால் பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்ற போது அவர்களை போலீசார் எச்சரித்து அப்புறப்படுத்தினர். இந்த நிலையில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே பூமி பூஜை நடைபெற்றது. பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையே சமூக வலைத்தளத்தில் எரிவாயு தகன மேடை திட்டம் வெற்றி அடைந்ததாக கருத்துக்கள் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பச்சாபாளையம் பகுதி மக்கள், ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்டோர் பல்லடம், கோவை, திருச்சி தேசிய நெடுஞ்சாலை நால்ரோடு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்லடம் நகரமே ஸ்தம்பித்தது. சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள் உள்பட 80 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.பின்னர் இரவு 8 மணி அளவில் விடுதலை செய்யப்பட்டனர்.

    ×