search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழைய இரும்பு கடை"

    • மைக்கேல் ஞானசேகர் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • கடை கதவு உடைக்கப்பட்டு ரூ.2 ஆயிரம் பணம் திருடப்பட்டு இருந்தது.

    நெல்லை:

    சங்கரன்கோவில் கக்கன்நகரை சேர்ந்தவர் மைக்கேல் ஞானசேகர். இவர் அப்பகுதியில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்ற மைக்கேல் மறுநாள் காலை கடைக்கு சென்று பார்த்தார். அப்போது கடை கதவு உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ.2 ஆயிரம் பணம் திருடப்பட்டு இருந்தது.

    இதுதொடர்பாக அவர் சங்கரன்கோவில் டவுன் போலீசில் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கக்கன் நகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் வேலுசாமி(வயது 32) என்பவர் நள்ளிரவில் கடைக்குள் புகுந்து பணம் திருடியது அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.காமிராக்கள் மூலம் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • காங்கயம் போலீசார் நள்ளிரவு திருப்பூா் சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
    • சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை நிறுத்தி விசாரித்தனா்.

    காங்கயம்:

    காங்கயம் புலிமாநகா் பகுதியை சோ்ந்தவா் கனகரத்தினம் (வயது 46). இவா் காங்கயம்-திருப்பூா் சாலையில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறாா். கனகரத்தினம் இரவு வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா்.இந்தநிலையில் காங்கயம் போலீசார் நள்ளிரவு திருப்பூா் சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஒரு நபா் கையில் சாக்கு மூட்டையுடன் நடந்து வந்துள்ளாா். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை நிறுத்தி விசாரித்தனா்.

    விசாரணையில் அவா் கடலூா் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை சோ்ந்த ஆறுமுகம் (44) என்பதும், இவா் கனகரத்தினத்தின் கடையில் இருந்து 15 கிலோ இரும்புகளை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருப்பூா் சிறையில் அடைத்தனா். 

    ×