என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வடமாநில தொழிலாளா்"
- அனைத்து தொழிலாளா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
- பிரச்சினைகளுக்கு போலீசார் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூரில் வேலை செய்து வரும் வடமாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து ஐஎன்டியூசி. தொழிற்சங்கம் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருப்பூா் பூங்கா சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் அச்சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளா் சிவசாமி பேசியதாவது:- திருப்பூரின் வளா்ச்சியிலும், பனியன் தொழிலின் வளா்ச்சியிலும் வடமாநில தொழிலாளா்களின் பங்கு இன்றிமையாதது. ஆனால் சமீபகாலமாக தமிழக தொழிலாளா்கள், வடமாநில தொழிலாளா்கள் இருதரப்பினரிடையே பல்வேறு விரோத சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனைத்தவிா்க்க அனைத்து தொழிலாளா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
பனியன் நிறுவன உரிமையாளா்கள் தங்களது நிறுவனங்களில் உள்ள தமிழக தொழிலாளா்கள் மற்றும் வடமாநில தொழிலாளா்கள் இடையே சுமூகமான உறவை தொடரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிறுவனத்துக்கு வெளியே நடைபெறுகிற பிரச்சினைகளுக்கு போலீசார் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் போலீசார், வடமாநிலத் தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா்.