search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்க்க போட்டி"

    • மார்க்க போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • மதரசா நிர்வாகி முகம்மது சுஹைல் நன்றி கூறினார்.

    கீழக்கரை

    கீழக்கரை அல் மதரஸத்துர் ராழியாவின் 12-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் மார்க்க போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா கடற்கரை பள்ளி வளாகத்தில் தாளாளர் அஹமது சுஹைல் தலைமையில் நடந்தது.

    சிறப்பு பேச்சாளராக வாவ் அகாடெமி நிறுவனர் உஸ்தாத் அலி பேசினார். இஸ்லாமிய கல்வி சங்கத்தின் சட்ட ஆலோசகரும், சென்னை ஐகோர்ட்டு வக்கீலுமான சாலிஹ் ஹுசைன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் சம்சுல் சுல்தான் கபீர் சங்க நிர்வாகிகளுடன் இணைந்து இணையதள முகவரியை தொடங்கி வைத்தார்.

    கீழக்கரை அல் பைய்யினா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த மார்க்க போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும், சின்னகடை தெரு அல் மதரஸத்துல் அஸ்ஹரியாவில் மாணவர்களுக்கான சிறப்பு தர்பியா வகுப்பு நடத்தப்பட்டது. யூடியூப் மூலம் நடந்த பொதுமக்களுக்கான கேள்வி பதில் போட்டிக்கான குலுக்களும் நடைபெற்று பரிசு வழங்கினர்.

    இதில் மதரஸாவின் முதல்வர் ஆலிம் தவ்ஹீத் ஜமாலி, கடற்கரை பள்ளி ஜமாத் செயலாளர் ஹமீது ஆஸ்கின், அல் பைய்யினா கல்வி குழும தாளாளர் ஜாபிர் சுலைமான், நிர்வாகிகள் அஜ்மல் கான், கல்யாண தம்பி, பாசீல் அக்ரம் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

    இதற்கான ஏற்பாடுகளை மதரசா நிர்வாகிகள் சைபுல்லாஹ், அசிம் ரஹ்மான், சுகைல், காதர், பர்ஹான், ஸப்வான், அய்மன், ரித்வான் ஆகியோர் செய்திருந்தனர். மதரசா நிர்வாகி முகம்மது சுஹைல் நன்றி கூறினார்.

    ×