search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமர் பிரசாத் ரெட்டி"

    • தமிழகத்தில் பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.
    • தென் சென்னையில் தமிழசை சவுந்தரராஜன், கோவையில் அண்ணாமலை போட்டி.

    மக்களவை தேர்தல் நடைபெறும் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தல் முதற்கட்டமாக தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

    பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீடுகள் முடிவடைந்த நிலையில், வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில், தமிழகத்தில் பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல், 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.

    இதில், தென் சென்னையில் தமிழசை சவுந்தரராஜன், கோவையில் அண்ணாமலை, விருதுநகரில் ராதிகா சரத்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில், தமிழகத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக அமர் பிரசாத் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

    • கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • 4 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கிய விவகாரத்தில் அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, பிரசாத் ரெட்டி அவரது கார் ஓட்டுனர் ஸ்ரீதர் உள்ளிட்ட 4 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    வன்கொடுமை தடுப்புச் சட்டம், அத்துமீறி உள்ளே புகுந்து தாக்குதல், காயப்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    • பா.ஜ.க. விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் உட்பட 5 பேரை கைது செய்து போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
    • அமர் பிரசாத் ரெட்டியை மேலும் இரண்டு வழக்குகளில் போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    சென்னையை அடுத்த பனையூரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட பா.ஜ.க. கொடிக்கம்பத்தை அகற்றிய போது பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜே.சி.பி. எந்திரத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் உட்பட 5 பேரை கைது செய்து போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, அமர் பிரசாத் ரெட்டியை மேலும் இரண்டு வழக்குகளில் போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், ஆலந்தூர் மாஜிஸ்திரேட் சந்திரபிரபா முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நவ.3-ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • அமர் பிரசாத் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • கானத்தூர், கோட்டூர்புரம் வழக்குகள் தொடர்பாக அமர்நாத் பிரசாத்தை போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர்.

    சென்னை:

    சென்னையை அடுத்த பனையூரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட பா.ஜ.க. கொடிக்கம்பத்தை அகற்றிய போது பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜே.சி.பி. எந்திரத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கானத்தூர், கோட்டூர்புரம் வழக்குகள் தொடர்பாக அமர்நாத் பிரசாத்தை போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்தார்.

    இந்த நிலையில் 2022-ம் ஆண்டு நுங்கம்பாக்கத்தில் போக்குவரத்து போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்த வழக்கில் இன்று எழும்பூர் கோர்ட்டில் அவர் ஆஜரானார்.

    • கொடிக்கம்பத்தை அகற்றிய தி.மு.க. அரசுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கண்டனம்.
    • இந்த விவகாரம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இல்லம் அருகே இருந்த கொடிக்கம்பத்தை போலீசார் நேற்று அகற்றினர். இதனை அகற்றும்போது பா.ஜ.க.வினர் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பனையூரில் பா.ஜ.க. கொடிக்கம்பத்தை அகற்றிய தி.மு.க. அரசுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு முழுக்க 10 ஆயிரம் இடங்களில் பா.ஜ.க. கொடிக்கம்பம் நடப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், கொடிக்கம்பத்தை அகற்றும் போது, மாநகராட்சியின் ஜே.சி.பி. இயந்திரத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக ஐந்து பேர் கைதான நிலையில், தற்போது அமர் பிரசாத் ரெட்டியும் கைதாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை வேண்டும், வாய்க்கொழுப்போடு பேசக்கூடாது என செல்லூர் ராஜூ கருத்து
    • செல்லூர் ராஜூ தன்னை வளர்த்துக் கொண்ட பின் கருத்துச் சொன்னால் நல்லது என அமர் பிரசாத் ரெட்டி பதில்

    சென்னை:

    பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சமீபத்தில் வெளியேறி கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைந்தனர். இது தொடர்பாக இரு கட்சி தலைவர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். பாஜகவிலிருந்து விலகியவர்களை கூட்டணி தர்மத்தை மீறி அதிமுகவில் சேர்த்துக் கொண்டதைக் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பாஜகவில் இருந்து ஆட்களை அழைத்துச் சென்றால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை உருவாகி உள்ளதாகவும், இது பாஜகவின் வளர்ச்சியை காட்டுகிறது என்றும் அண்ணாமலை கூறினார்.

    பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை வேண்டும், வாயடக்கம் தேவை, வாய்க்கொழுப்போடு பேசக்கூடாது. மத்தியில் ஆளும் திமிரோடு பேசக்கூடாது என அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்தார்.

    இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி. "இத்தனை நாட்கள் தெர்மோகோல் ஆராய்ச்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமிரில் பேசக் கூடாது என பா.ஜ.க.வுக்கு ஆலோசனை சொல்லுகிறார். அவர் தன்னை வளர்த்துக் கொண்ட பின் கருத்துச் சொன்னால் நல்லது", என அமர் பிரசாத் ரெட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    அத்துடன், செல்லூர் ராஜூ அமைச்சராக இருந்தபோது வைகை அணையில் நீர் ஆவியாவதைத் தடுக்க, தெர்மோகோல் மிதக்கவிட்ட படத்தையும் அமர் பிரசாத் ரெட்டி பகிர்ந்துள்ளார்.

    ×