search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்த்திக் சிதம்பரம் எம்.பி."

    • உடற்கல்வி முக்கியமானதாக கருதப்பட வேண்டும் என்று கார்த்திக் சிதம்பரம் எம்.பி. கூறினார்.
    • உடற்கல்வி ஆசிரியர் லூர்து ராஜ் நன்றி கூறினார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேவுகன் அண்ணாமலை கலைக்கல்லூரியில் 53-வது ஆண்டு விளையாட்டு விழா 2 நாட்கள் நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் லட்சுமணன் செட்டியார், துணைத்தலைவர் சேவுகன் செட்டியார், செயலாளர் சாந்தி ஆச்சி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சிறப்பு விருந்தினராக கார்த்திக் சிதம்பரம் எம்.பி., கலந்து கொண்டார்.

    கல்லூரியில் முதல்வர் ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.

    விழா தொடக்கத்தில் 11 துறைகள் சார்பாக அணி வகுப்பு நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக விளையாட்டு வீரர்கள் 18பேர் ஒலிம்பிக் தீபம் ஏந்தி வந்து மைதானத்தில் ஜோதியை ஏற்றி வைத்தனர்.

    இங்கு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கார்த்திக் சிதம்பரம் எம்.பி. சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். விழாவில் அவர் பேசும்போது கூறியதாவது:-

    நமது சமூகம் பரீட்சை நடத்தும் சமூகமாக இருக்கிறது. 1 கிலோ மீட்டர் தூரத்தை 6 அல்லது 8 நிமிடத்தில் கடக்கக்கூடிய மாணவ- மாணவிகளை மட்டும்தான் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். உடற்கல்வி என்பது மிக முக்கியமானதாக கருதப்பட வேண்டும்.

    மாணவ-மாணவிகள் விளையாட்டு துறையில் சிறந்து விளங்க நல்ல உடற்கல்வி ஆசிரியர் தேவை. தமிழ்நாடு அரசு ஸ்போர்ட்ஸ் சென்டர் கட்டப்போவதாக தெரிவித்துள்ளது. அதற்கு முன்பு பள்ளி, கல்லூரிகளில் உடற்கல்வி ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும். உடற்கல்வி ஆசிரியருக்கு மரியாதை அளிக்க வேண்டும். அடிக்கடி விளையாட்டு விழா நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். முடிவில் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் லூர்து ராஜ் நன்றி கூறினார்.

    ×