search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரிமானியம்"

    • 25 சதவீதம் அளவுக்கு இறக்குமதி வரியில் இருந்து சலுகை கிடைக்கிறது.
    • 6 மடங்கு அதிகமாக ஏற்றுமதி நடந்திருக்க வேண்டும்.

    திருப்பூர் :

    மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் ஓர் அங்கமாக வெளிநாட்டு வர்த்தக பிரிவு இயங்குகிறது. குறிப்பாக ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சியை ஊக்கப்படு த்தும் வகையில் வெளிநாட்டு வர்த்தக பிரிவு மண்டலம் வாரியாக இயங்குகிறது.

    ஏற்றுமதி ஊக்குவிப்பு முதலீட்டு உத்தரவாத திட்டத்தில் (இ.பி.சி.ஜி.,), வெளிநாடுகளில் இருந்து எந்திரங்கள் இறக்குமதி செய்ய, ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு வட்டி சலுகை வழங்கப்படுகிறது. அதாவது 25 சதவீதம் அளவுக்கு இறக்குமதி வரியில் இருந்து சலுகை கிடைக்கிறது.

    இத்திட்டத்தில் தொடர்புடைய ஏற்றுமதி நிறுவனங்களுடன் இணைந்து பொது சேவை மையமாக பதிவு செய்து விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. வரிச்சலுகை பெற வேண்டுமெனில் இறக்குமதி வரி மதிப்பை காட்டிலும் 6 ஆண்டுகளில், 6 மடங்கு அதிகமாக ஏற்றுமதி நடந்திருக்க வேண்டும்.

    கொரோனா தொற்று காலத்தில் ஏற்றுமதி இலக்கை எட்ட முடியாத ஜாப் ஒர்க் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், வரிச்சலுகை பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. நீண்ட இழுபறிக்கு பின் விடுபட்ட வர்கள் விண்ணப்பித்து சலுகை பெற கடைசியாக ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு ள்ளது. திருப்பூர் ஜாப் ஒர்க் நிறுவனங்களுடன் பேசிய வெளிநாட்டு வர்த்தக பிரிவு அலுவலர்கள் பிப்ரவரி 28க்குள் விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் விடுபட்ட நிறுவனங்களுக்கு 17ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இது குறித்து வெளிநாட்டு வர்த்தக பிரிவு இணை இயக்குனர் (கோவை) ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பொதுசேவை பதிவு இல்லாத, ஜாப் ஒர்க் நிறுவனங்கள், நிலுவையில் உள்ள வரிசலுகையை பெற விண்ணப்பிக்க வேண்டும்.அதற்காக முழு ஆவண ஆதாரங்களுடன் வரும் 17-ந் தேதிக்குள் சம்பந்தப்ப ட்ட சங்க அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பிறகு விண்ணப்பித்தால், சலுகை கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்று காலத்தில் ஏற்றுமதி இலக்கை எட்ட முடியாத ஜாப் ஒர்க் நிறுவனங்கள் ஏற்றுமதி நிறுவனங்கள், வரிச்சலுகை பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. நீண்ட இழுபறிக்கு பின் விடுபட்ட வர்கள் விண்ணப்பித்து, சலுகை பெற கடைசியாக ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ×