என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி"
- முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா நடந்தது.
- எந்திரவியல் துறைத்தலைவர் கணேஷ்குமார் நன்றி கூறினார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 43-வது ஆண்டு விழா கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வர் சேக்தாவூது ஆண்டறிக்கை வாசித்தார். விழாவையொட்டி மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
சாதனை படைத்த முதல், 2-ம் மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு சென்னை கே.வி.எஸ். தொழிற்சாலை நிர்வாக இயக்குநரும், தொழில் அதிபரும், முன்னாள் மாணவருமான வெற்றிசெழியன் பரிசு வழங்கினார். கல்லுாரி முதுநிலை விரிவுரையாளர் மரியதாஸ் வரவேற்று பேசினார். எந்திரவியல் துறைத்தலைவர் கணேஷ்குமார் நன்றி கூறினார்.
கல்லூரி துணை முதல்வர் சேக் தாவூது, அமைப்பியல் துறை தலைவர் (பொறுப்பு) செந்தில்ராஜன், எந்திரவியல் துறைத்தலைவர் டாக்டர் கணேஷ்குமார், மெரைன் துறை தலைவர் (பொறுப்பு) சுதேவ், மின்னியல் துறை தலைவர் (பொறுப்பு) நாகராஜன், கணினி துறை தலைவர் (பொறுப்பு) நாகராஜன் மற்றும் முதலாம் ஆண்டு துறை தலைவர் (பொறுப்பு) உமையாள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் செய்திருந்தனர். இதில் அனைத்து துறை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.