என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குற்றால அருவிகள்"
- இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
- விட்டு விட்டு சாரல் மழை மற்றும் குளிர்ந்த காற்றுடன் குளு,குளு சீசன் நிலவி வருவதால் ரம்யமான சூழ்நிலை நிலவுகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் சாரல் மழையினால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அணைகள் மற்றும் நீர்நிலை பகுதிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
குறிப்பாக முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வரும் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டி வருவதால் வெளியூர் சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு குடும்பம் குடும்பமாக படை எடுக்க தொடங்கியுள்ளனர். இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
குற்றால அருவிகளில் ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள உணவு மற்றும் பழக்கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களை வாங்கி உண்பதோடு பலாப்பழங்களை வீடுகளுக்கு வாங்கி செல்கின்றனர்.
இன்று வானம் மேகமூட்டத்துடனும், விட்டு விட்டு சாரல் மழை மற்றும் குளிர்ந்த காற்றுடன் குளு,குளு சீசன் நிலவி வருவதால் ரம்யமான சூழ்நிலை நிலவுகிறது.
- கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக நீர் நிலைகளிலும் தண்ணீரின் அளவு கணிசமாக குறைய தொடங்கி உள்ளது.
- அனைத்து அருவிகளும் வறண்டு காணப்படுவதால் சுற்றுலா பயணிகளின் வரத்துகள் இன்றி அருவி கரையானது வெறிச்சோடி காணப்படுகிறது.
தென்காசி:
தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இதனால் பொதுமக்கள் பலரும் குளிப்பதற்காக நீர் நிலைகளை அதிகம் நாடி வருகின்றனர். இந்நிலையில் கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக நீர் நிலைகளிலும் தண்ணீரின் அளவு கணிசமாக குறைய தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தளமான குற்றால அருவிகளும் தற்போது சுட்டெரிக்கும் வெயிலால் தண்ணீர் வரத்து குறைந்து அருவிகள் வறண்டு காணப்படுகின்றன.
இதேபோல் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் வறண்டு காணப்படுவதால் சுற்றுலா பயணிகளின் வரத்துகள் இன்றி அருவி கரையானது வெறிச்சோடி காணப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கும் பொழுது குற்றால சீசன் தொடங்கும்.
- குற்றால அருவிகள் போதிய மழை இல்லாமல் கோடை காலம் என்பதால் நீர்வரத்து இன்றி காட்சியளித்து வருகின்றது.
- மெயின் அருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகள் அனைத்தும் போதிய நீரின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
தென்காசி:
தமிழகத்தில் தற்பொழுது மழைக்காலம் முடிந்து கோடை காலம் தொடங்கியுள்ளதால் மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக திகழ்ந்துவரும் குற்றால அருவிகள் போதிய மழை இல்லாமல் கோடை காலம் என்பதால் நீர்வரத்து இன்றி காட்சியளித்து வருகின்றது. குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகள் அனைத்தும் போதிய நீரின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கோடை மழையானது சூறைக்காற்று, இடி மின்னலுடன் கூடிய கனமழையாக வெளுத்து வாங்கிய நிலையிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யாததால் அருவிகள் அனைத்தும் நாளுக்கு நாள் வெறும் பாறைகளாக காட்சியளித்து வருகின்றன.
குற்றால அருவிகளுக்கு குளிப்பதற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பி கடைகள் அமைத்திருந்த வியாபாரிகள் அனைவரும் சுற்றுலா பயணிகளின் வருகை இல்லாததால் கடைகளை திறக்காமல் மூடியே வைத்துள்ளனர்.
எனவே தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கோடை மழை பெய்ய தொடங்கினால் மட்டுமே குற்றால அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கும்.
சுற்றுலா பயணிகளும் குற்றால அருவிகளை நாடிச் செல்வர். கடைகள் அமைத்துள்ள வியாபாரிகள் அனைவரும் அருவிகளில் எப்பொழுது நீர் கொட்டும், சுற்றுலா பயணிகளின் கூட்டம் வரும் நிலை ஏற்படுமா?என காத்திருக்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்