என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாநில மனித உரிமை ஆணையம்"
- மாவட்ட நிர்வாகம், சமூக நலத்துறை, காவல்துறை ஒருங்கிணைந்து செயல்படுவதால், விதிகளின்படி எல்லாம் சிறப்பாக உள்ளது.
- சிறைச்சாலைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்,
தருமபுரி,
மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ண தாசன், தருமபுரி மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்கள், மகளிர் விடுதிகள் சிறைச்சாலைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்,
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்த அவர், தமிழகத்தில், முதியோர் இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்கள், மகளிர் விடுதிகள், சிறைச்சாலைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறோம்.
அந்த அடிப்படையில் தருமபுரி மாவட்டத்திலுள்ள விடுதிகள், காப்பகங்கள், மாவட்ட மத்திய சிறைச்சாலை மற்றும் கிளைச்சிறைச்சாலைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளாதாக தெரிவித்த அவர், கடந்த மாதம் நெல்லையில் இதே போன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.
தருமபுரியில் ஆய்வு செய்ததில், மாவட்ட நிர்வாகம், சமூக நலத்துறை, காவல்துறை ஒருங்கிணைந்து செயல்படுவதால், விதிகளின்படி எல்லாம் சிறப்பாக உள்ளது. தமிழத்தை பொறுத்தவரை 21 ஆயிரம் சிறை கைதிகளை அடைக்க இட வசதி உள்ளது.
ஆயினும் தமிழகத்தில் 16 ஆயிரம் பேர் சிறை வாசிகளே சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைகளில் அறைகள் தூய்மையாக உள்ளதா, காற்றோட்ட வசதி, சூரிய வெளிச்சம், மின் விளக்குகள், மின் விசிறி வசதி , சிறைவாசிகளுக்கு உணவு, மருத்துவ வசதி, கழிவறை வசதி உள்ளதா எனவும், தவிர சிறைவாசிகளுக்கு சட்ட உதவி அளிக்கப்படுகிறதா, உறவினர்களிடமிருந்து வழங்கபடும் செய்திகள் முறையாக வழங்கபடுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்யபட்டதாக தெரிவித்தார்.
- ரோகிணி திரையரங்கிற்கு பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவர்களை, ஊழியர்கள் அனுமதிக்க மறுத்த சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது.
- இந்த சம்பவத்திற்கு பலர் சமூக வலைத்தளத்தின் வாயிலாக கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
சென்னை ரோகிணி திரையரங்கில் நேற்று பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். டிக்கெட் இருந்தும் அவர்களை அனுமதிக்காததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி பேசுப்பொருளாகியுள்ளது.
இதையடுத்து நரிக்குறவர்களை அனுமதிக்காததற்கான காரணம் குறித்து ரோகிணி திரையரங்கம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், யு/ஏ சான்றிதழ் அனுமதி பெற்ற படம் என்பதால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வந்தவர்கள் 2,6,8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் உரிய நேரத்தில் அவர்கள் படம் பார்த்ததாக திரையரங்க நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டது.
எனினும் இந்த சம்பவம் தொடர்பாக திரைப்பிரபலங்கள் பலர் தொடர்ந்து கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர்களை அழைத்து விசாரணை நடத்த மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்துள்ளது. குறிப்பாக மாநில மனித உரிமை ஆணையத்தின் அதிகாரி எஸ்.பி. மகேஸ்வரன் தலைமையில் விசாரணை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக சென்னை, ரோகிணி திரையரங்கத்தின் வளாகத்திற்கு பாதிக்கப்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த 4 பேர் அழைகப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ரோகிணி திரையரங்க உரிமையாளரிடமும் விசாரணை நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்