search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரியம்மை"

    • பசு மாடுகளுக்கு ஏற்படும் பெரியம்மை நோயானது வைரஸ் நோயாகும்.
    • நாட்டு மாடுகளை விட கலப்பின மாடுகளில் இந்த பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.

    கோவை,

    மாடுகளில் ஏற்படும் பெரியம்மை நோய் பாதிப்பை தடுக்கும் வழிமுறைகள் குறித்து கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் பெருமாள்சாமி விளக்கம் அளித்துள்ளார்.

    இதுதொர்பாக அவர் கூறியதாவது: பசு மாடுகளுக்கு ஏற்படும் பெரியம்மை நோயானது வைரஸ் நோயாகும். ஈ, கொசு, உண்ணிகள் போன்ற கடிக்கும் பூச்சிகள் மூலம், பாதிக்கப்பட்ட மாடுகளில் இருந்து மற்ற மாடுகளுக்கு பரவுகிறது. இதுதவிர, நோயுற்ற மாடுகளின் எச்சம், ரத்தம், கொப்புளங்கள், விந்தணுக்கள் மூலமும் பரவுகிறது. இதன்மூலம் கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. நாட்டு மாடுகளை விட கலப்பின மாடுகளில் இந்த பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.

    மாடுகளுக்கு அதிக காய்ச்சல், பசியின்மை, சோர்வு, உடல் எடை குறைதல், கண்களில் வீக்கம், நீர் வடிதல், அதிக உமிழ்நீர் சுரப்பு, பால் உற்பத்தி குறைதல், தலை, கழுத்து கால்கள், இனப்பெருக்க உறுப்புகள் போன்றவற்றில் 2 முதல் 5 செ.மீ அளவுக்கு கொப்புளங்கள் தென்ப டுதல் இந்நோயின் அறிகு றிகள் ஆகும். கொப்புளங்கள் உறுதியாக, வட்டமாக நன்கு உப்பியிருக்கும். பெரிய கொப்புளங்கள் கீழ் பிடித்து புண்ணாகி பின்னர், தழும்புகள் ஏற்பட்டு இறுதி வரை மறையாது. கொப்பு ளங்களில் புழுக்கள் உருவாகவும் வாய்ப்புள்ளது.

    நோயை தடுக்க நோயுற்ற மாடுகளை தனிமைப்படுத்து வதுடன், மாடுகளை பராமரிக்கும் இடத்தின் சுத்தம், சுகாதாரம் மிகவும் அவசியம். கிருமிநாசினியை கொண்டு கொட்டகையை சுத்தம் செய்ய வேண்டும். கொட்டகையை காற்றோட்டமாகவும், சூரிய ஒளி படுமாறும் அமைக்க வேண்டும். இந்த நோய்க் கென தனியே தடுப்பூசி இல்லை. இருப்பினும் வெள்ளாட்டில் அம்மை பாதிப்பை ஏற்படுத்தும் வைரசும் ஒரே மாதிரி இருக்கும்.எனவே, அந்த தடுப்பூசியே மாடுகளுக்கும் செலுத்தப்படுகிறது. பிப்ரவரி வரை 1.90 லட்சம் தடுப்பூசிகள் கோவையில் செலுத்தப்பட்டுள்ளன.

    மூலிகை வைத்திய முறையும் இந்நோய்க்கு சிறந்தது. பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு வெற்றிலை 10, மிளகு 10 கிராம், வெல்லம் ஆகியவற்றை அரைத்து தடவி விட வேண்டும்.

    காயத்துக்கு வெ ளிப்பூச்சாக குப்பைமேனி இலை, வேப்பிலை, துளசி இலை, மருதாணி இலை (ஒவ்வொன்றிலும் ஒரு கைப்பிடி), மஞ்சள்தூள் 20 கிராம், 10 பூண்டு ஆகியவற்றை அரைத்து, அரை லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யில் கலந்து கொதிக்க வைத்து ஆறவிட்டு, காயங்களை சுத்தப்படுத்திய பின், மருந்தை அதன் மேல் தடவ வேண்டும்.

    காயத்தில் புழுக்கள் இருப்பின் சீத்தாப்பழ இலையை அரைத்து தடவ வேண்டும். அல்லது பச்சை கற்பூரத்தை தேங்காய் எண்ணெய்யில் கலந்து காயத்தில் விட்டு, புழுக்களை அப்புறப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×