search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டுத்தோட்டம் அமைக்க"

    • சிறுதானியங்கள் குறித்து ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டு வருகிறது.
    • தோட்ட க்கலைத்துறையின் சார்பில் மாவட்டத்திலுள்ள 20 அங்கன்வாடி மைங்களில் வீட்டுதோட்டம் அமைப்ப தற்கு விதைகள் மற்றும் முருங்கை, பப்பாளி, எலுமிச்சை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போர்ஷன் பக்கோடா இரு வாரத்தினை முன்னிட்டு அங்கன்வாடி மையங்களில் வீட்டு த்தோட்டம் அமைப்ப தற்கான விதைகள் மற்றும் மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் போர்ஷன் பக்கோடா இரு வாரத்தினை முன்னிட்டு மார்ச்-20 முதல் ஏப்ரல்-03 வரை சிறுதானியங்கள் குறித்து ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டு வருகிறது. அதன டிப்படையில் தோட்ட க்கலைத்துறையின் சார்பில் மாவட்டத்திலுள்ள 20 அங்கன்வாடி மைங்களில் வீட்டுதோட்டம் அமைப்ப தற்கு விதைகள் மற்றும் முருங்கை, பப்பாளி, எலுமிச்சை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து கலெக்டர் தலைமையில் ஊட்டச்சத்து உறுதிமொழி யினை அரசு அலுவலர்கள், பணியாளர்கள், அங்க ன்வாடி பணியாளர்கள் எடுத்துக்கொண்டனர். மேலும், சிறுதானியங்களை பயன்படுத்தி தயாரிக்க ப்பட்ட சிறுதானிய உணவு களை கலெக்டர், அலுவ லர்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கினார்.

    ×