என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விஷால் பிலிம் பேக்டரி"
- தங்களிடம் பெற்ற கடனை செலுத்தாமல் வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிட விஷாலுக்கு தடை விதிக்க கோரி லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
- ரூ.15 கோடியை உயர்நீதிமன்றம் தலைமைப் பதிவாளர் பெயரில் 3 வாரங்களில் வங்கியொன்றில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்ய வேண்டும் என விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, பைனான்சியர் அன்புச் செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். இந்த கடனை அடைத்த லைகா சினிமா நிறுவனம், பணத்தை திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று விஷாலுடன் ஒப்பந்தம் செய்திருந்தது. கடனை செலுத்தாமல் வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிட விஷாலுக்கு தடை விதிக்க கோரி லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 15 கோடி ரூபாயை உயர்நீதிமன்றம் தலைமைப் பதிவாளர் பெயரில் 3 வாரங்களில் வங்கியொன்றில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்ய வேண்டும் என விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நேரில் ஆஜரான விஷால், இந்த உத்தரவை எதிர்த்து லைகா நிறுவனம் மேல்முறையீடு சென்றதால் தான் பணத்தை செலுத்தவில்லை என்றும், தனக்கு ஒரே நாளில் 18 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதை அடைக்கவே படங்களில் நடித்துவருவதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து விஷாலின் விளக்கத்தையும், அவரது சொத்து விவரங்களையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கை எதிர்த்து விஷால் தரப்பு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை பொறுப்பு நீதிபதி ராஜா மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. இதில், ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் விஷால் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர். மேலும், இந்த தொகையை செலுத்தாவிட்டால் தனிநீதிபதியிடம் உள்ள உரிமையியல் வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படங்களை திரையரங்கு மற்றும் ஓடிடி தளங்களில் வெளியிட கூடாது என்று தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்