என் மலர்
நீங்கள் தேடியது "தமிழ் புத்தாண்டு"
- ஈஷாவில் தமிழ் புத்தாண்டு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
- அங்குள்ள லிங்கபைரவி தேவிக்கு பக்தர்கள் பலவகை பழங்களை அர்ப்பணித்து வழிபட்டனர்.
கோவை:
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஈஷாவில் உள்ள லிங்கபைரவி தேவிக்கு பக்தர்கள் பல வகையான பழங்களை அர்ப்பணித்து வழிபட்டனர். தமிழகம் முழுவதும் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான மக்கள் தேவியை தரிசனம் செய்து அவளின் அருளைப் பெற்றனர்.
சுற்றுவட்டார கிராம மக்களால் கனிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட லிங்கபைரவி திருமேனியை பக்தர்கள் ஆதியோகியில் இருந்து ரதத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து மாலை சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா மற்றும் ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்களின் பக்திப் பாடல்களுடன் கூடிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், லிங்கபைரவியில் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
இதுதவிர, பக்தி நயம் ததும்பும் தேவாரப் பாடல்களை தமிழக கிராமங்கள் தோறும் கொண்டு சேர்க்கவேண்டும் என கடந்த மகாசிவராத்திரி அன்று சத்குரு கூறினார். அதன் ஒருபகுதியாக, ஆதியோகி முன் தேவாரப் பாடல்களை அர்ப்பணிக்கும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்படும் என அறிவித்தார்.
அதன் தொடக்கமாக, சென்னையைச் சேர்ந்த 9 வயது சிறுவன் சூரிய நாராயணன் தோடுடைய செவியன், பித்தா பிறைசூடி, வானனை மதி சூடிய போன்ற தேவாரப் பாடல்களை ஆதி யோகிக்கு அர்ப்பணித்து அவரின் திருமேனியை பரிசாகப் பெற்றார். வெறும் 9 வயதே ஆன இச்சிறுவன் தனது தந்தை ஹரிஹரன் சிவராமனிடம் இருந்து 5 வயது முதல் கர்நாடக சங்கீதம் கற்று வருகிறார். இவர் தூர்தர்ஷன் பொதிகை டிவி, மலேசியா சர்வதேச கர்நாடக இசை திருவிழா, கிருஷ்ண கான சபை மற்றும் பல்வேறு கோவில் திருவிழாக்களிலும் பக்திப்பாடல்கள் பாடியுள்ளார். அவருடன் சேர்ந்து ஏராளமான குழந்தைகள் தேவாரம் பாடி பரிசுகள் பெற்றனர். முன்னதாக, சிவனுக்கு உகந்த கைலாய வாத்தியமும் இசைக்கப்பட்டது.
- அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக,அலங்கார பூஜை நடைபெற்றது.
- பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து கன்னிமார் கருப்பராயன் கோவிலில் சிறப்புவழிபாடு செய்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் தண்ணீர்பந்தல் காலனியில் விநாயகர், கன்னிமார்,பாலமுருகன், ஆதிபராசக்தி, கருப்பராய சுவாமி கோவில்உள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி கன்னிமார் கருப்பராயன் உள்பட அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக,அலங்கார பூஜை நடைபெற்றது. முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பி.ஆர். டிரேடர்ஸ் உரிமையாளர் தண்ணீர்பந்தல்பி.தனபால் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவிலில் இருந்து தீர்த்தக்குடம்எடுத்து வந்து கன்னிமார் கருப்பராயன் கோவிலில் சிறப்புவழிபாடு செய்தனர்.
- சீர்காழியை அடுத்த திட்டையில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான காப்பகம் இயங்கி வருகிறது.
- தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குழந்தைகளுடன் மாவட்ட கலெக்டர் மகாபாரதி புத்தாண்டை கொண்டாடினார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திட்டையில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான அன்பாலயம் காப்பகம் இயங்கி வருகிறது.
இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் புத்தாடைகள் பழங்கள் உள்ளிட்டவர்களை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கி குழந்தைகளுடன் புத்தாண்டை கொண்டாடினார்.
மேலும் இந்த குழந்தைகள் உருவாக்கும் கைவினைப் பொருட்கள் கைத்தறி ஆடைகள் கண்டு பாராட்டு தெரிவித்தார்.
மேலும் அன்பாலய குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் அமைத்து தரக்கோரி அன்பாலய நிர்வாகம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
- 18 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகபூஜை செய்யப்பட்டது.
பல்லடம் :
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல்லடம் பகுதியில்உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதன்படிபல்லடம் பாலதண்டாயுதபாணி கோவிலில்,முருகப் பெருமானுக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி மலை கோவிலில் முத்துக்கு மாரசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் முருகப்பெருமானுக்கு 18 வகை வாசனை திரவியங்கள், பழங்கள், உள்ளிட்டவைகளால் அபிஷேகபூஜை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதே போல பல்லடம் அங்காளம்மன் கோவிலில், அங்காளம்மனை பழங்களால் அலங்கரித்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
- கோவில் நடையை நாளை மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி திறந்து வைக்கிறார்.
- தினமும் நெய் அபிஷேகம், படிபூஜை, உதயாஸ்த மன பூஜை, சகஸ்ர கலச பூஜை, புஷ்பாபிஷேம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு மாதமும் மாதாந்திர பூஜைக்காக கோவில் நடை திறக்கப்படும். தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.
அதன்படி சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை(10-ந்தேதி) திறக்கப்படுகிறது. கோவில் நடையை நாளை மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி திறந்து வைக்கிறார்.
நாளை மறுநாள்(11-ந்தேதி முதல் நெய் அபிஷேகம் உள்ளிட்ட அனைத்து பூஜைகளும் நடைபெறும். இதற்காக அன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு கோவில் நடை வருகிற 18-ந்தேதி வரை திறந்திருக்கும்.
தினமும் நெய் அபிஷேகம், படிபூஜை, உதயாஸ்த மன பூஜை, சகஸ்ர கலச பூஜை, புஷ்பாபிஷேம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். நாளை மறுநாள் முதல் 18-ந்தேதி வரை 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். வருகிற 14-ந்தேதி விஷூ பண்டிகை சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறுகிறது.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் உடனடி முன்பதிவு செய்தும் சாமி தரிசனம் செய்யலாம். இதற்காக பம்பையில் உடனடி முன்பதிவு மையம் அமைக்கப்படுகின்றன.
சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பத்தினம்திட்டா, கோட்டயம், திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, எர்ணாகுளம், பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- அன்பார்ந்த சகோதர சகோதரிகளே வணக்கம் என தமிழில் தனது உரையை தொடங்கினார்.
- வரவிருக்கும் தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய புத்தாண்டாக அமையட்டும்.
வேலூர்:
வேலூர் கோட்டை மைதானத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்:-
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே வணக்கம் என தமிழில் தனது உரையை தொடங்கினார். மேலும் தமிழில் பேச முடியாததற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். வரவிருக்கும் தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய புத்தாண்டாக அமையட்டும்.
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் என்றார்.
- காலை 8.30 மணியளவில் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரியும், தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும் நடக்கிறது.
- 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறுகிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.
4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது.
காலை 8.30 மணியளவில் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரியும், தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும் நடக்கிறது.
காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகம் தொடர்ந்து உச்சிகால தீபாராதனை நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறுகிறது.
கோவில் வளாகத்தில் காலை 8 மணிக்கு நாதஸ்வர மங்கள இசை, 8.30 மணிக்கு தேவார இன்னிசை, காலை 9 மற்றும் 12 மணிக்கு ஆன்மீகச் சொற்பொழிவு நடக்கிறது. காலை 10.30 மணிக்கு பொது விவரக்குறிப்பேடு வெளியிடப்படுகிறது.
மாலை 3 மணிக்கு இந்து தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், மாலை 6 மணிக்கு அக்னி தனிப்பயிற்சி கல்வி நிலைய மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
- தமிழ் புத்தாண்டான நாளை தமிழகம் முழுவதும் 30 லட்சம் குடும்பங்களுக்கு வீடு வீடாக வினியோகிக்க பா.ஜனதாவினர் முடிவு செய்துள்ளார்கள்.
- ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வாழ்த்து அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு தமிழில் பிரதமர் மோடியின் கையெழுத்துடன் வாழ்த்து அட்டைதயாராகி உள்ளது.
அந்த வாழ்த்து அட்டையில் உலக தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்ற தலைப்பில் வாழ்த்து செய்தி இடம் பெற்றுள்ளது. அதில்,
"இந்த குரோதி வருட புத்தாண்டில்
புதுமைகள் தொடரட்டும்
மாற்றங்கள் மலரட்டும்
எல்லோர் வாழ்விலும்
மகிழ்ச்சி நிலைக்கட்டும்"
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வீடு வீடாக தமிழ் புத்தாண்டான நாளை தமிழகம் முழுவதும் 30 லட்சம் குடும்பங்களுக்கு வீடு வீடாக வினியோகிக்க பா.ஜனதாவினர் முடிவு செய்துள்ளார்கள்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வாழ்த்து அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- தமிழ்புத்தாண்டை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
- பிரதமர் மோடி, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு தமிழில் பிரதமர் மோடியின் கையெழுத்துடன் வாழ்த்து அட்டைதயாராகி உள்ளது.
அந்த வாழ்த்து அட்டையில் உலக தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்ற தலைப்பில் வாழ்த்து செய்தி இடம் பெற்றுள்ளது. அதில்,
"இந்த குரோதி வருட புத்தாண்டில்
புதுமைகள் தொடரட்டும்
மாற்றங்கள் மலரட்டும்
எல்லோர் வாழ்விலும்
மகிழ்ச்சி நிலைக்கட்டும்"
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வீடு வீடாக தமிழ் புத்தாண்டான தமிழகம் முழுவதும் 30 லட்சம் குடும்பங்களுக்கு வீடு வீடாக வினியோகிக்க பா.ஜனதாவினர் முடிவு செய்துள்ளார்கள்.
தமிழ்புத்தாண்டை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ் கலாச்சாரத்தின் துடிப்பான மரபுகள் மற்றும் ஆழமான பாரம்பரியத்தின் வெளிப்பாடாக திகழும் புத்தாண்டு வாழ்த்துகள். வரும் ஆண்டு அமைதி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும். இந்த ஆண்டு அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, வெற்றி மற்றும் நிறைவைக் கொண்டு வரட்டும்" என்றார்.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! pic.twitter.com/oVOc1pO8Ln
— Narendra Modi (@narendramodi) April 14, 2024
- ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பழனி:
சோபகிருது முடிந்து இன்று குரோதி வருடம் பிறந்ததைத் தொடர்ந்து பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
குரோதி வருட தமிழ்புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மலைக்கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அடிவாரம், ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம், படிப்பாதை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சுவாமி தரிசனத்துக்கு 3 மணி நேரம் வரை ஆன போதிலும் காத்திருந்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
இதே போல் திண்டுக்கல் அபிராமி அம்மன் உடனுறை பத்மகிரீஸ்வரர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுவாமிக்கும், அம்பாளுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டன.
திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மூலவருக்கு சொர்ண அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பூஜை செய்யப்பட்ட நாணயங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து நாணயங்களையும், பிரசாதங்களையும் பெற்றுச் சென்றனர்.
- சண்முகருக்கு அன்னாபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது.
- மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று அதி காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும் நடைபெற்றது.
காலை 10.30 மணிக்கு 'சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்கிறது.
கோவில் வளாகத்தில் காலை 8 மணிக்கு நாதஸ்வர மங்கள இசை, 8.30 மணிக்கு தேவார இன்னிசை, காலை 9 மற்றும் 12 மணிக்கு ஆன்மீகச் சொற்பொழிவு, காலை 10.30 மணிக்கு பொது விவரக் குறிப்பேடு வெளியிடப்பட்டது. மாலை 6 மணிக்கு அக்னி தனிப்பயிற்சி கல்வி நிலைய மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

தமிழ் புத்தாண்டு மற்றும் விடுமுறை தினம் என்பதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் குவிந்தனர்.

அவர்கள் காலையில் இருந்தே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று தமிழ் புத்தாண்டு தினம் என்பதால் சுமார் 5 மணிநேரம் காத்திருந்த பின்னரே பக்தர்கள் தரிசனம் செய்ய முடிந்தது. திருச்செந்தூர் முழுவதும் பக்தர்கள் கூட்டம் மற்றும் வாகன மிகுதியால் போக்குவரத்து ஸ்தம்பித்து.
- திருமணக்கோலத்தில் அகத்தியருக்கு காட்சியளித்து அருளாசி வழங்கினர்.
- சித்திரை முதல் நாள் இரவில் திருக்கல்யாண காட்சி வைபவம் நடந்தேறும்.
கோவிலின் முகப்புத் தோற்றம்
திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது பாபவிநாசர் -உலகாம்பிகை கோவில். இங்கு ஆண்டுதோறும் சித்திரை விசு திருவிழாவின் 10-ம் நாளில் சிவபெருமான்-பார்வதி தேவி திருமணக்கோலத்தில் அகத்தியருக்கு காட்சி கொடுத்த வைபவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

முன் காலத்தில் தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற பங்குனி உத்திர நன்னாளில், சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்தது. திருமண கோலத்தில் சுவாமி-அம்பாளை தரிசிப்பதற்காக முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும் இமயமலை அமைந்துள்ள வடபகுதிக்கு சென்றனர். இதனால் வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது.
எனவே உலகை சமநிலைப்படுத்த அகத்திய முனிவரை அழைத்த பரமேஸ்வரன், அவரை உடனடியாக தென்திசை நோக்கி செல்லுமாறு கட்டளையிட்டார். இதனால் 'சுவாமி-அம்பாளின் திருமணக்காட்சியை காணும் பாக்கியம் கிடைக்காமல் போய்விடுமே' என்று அகத்தியர் வருந்தினார்.
அகத்தியரின் வருத்தத்தை உணர்ந்த ஈசன், `இங்கு நடைபெறும் திருமணக் கோலத்தில் பொதிகை மலைச் சாரலில் இருக்கும் பாபநாசத்தில், சித்திரை மாதப்பிறப்பு நாளில், சித்திரை விசு தினத்தன்று நேரில் வந்து காட்சி கொடுப்போம்' என்று உறுதியளித்தார்.
இதையடுத்து அங்கிருந்து விடைபெற்ற அகத்தியரிடம், தாமிரபரணி தீர்த்தத்தை சிவபெருமான் வழங்கினார். அதை தன் கமண்டலத்தில் பெற்றுக் கொண்டு தென்பகுதிக்கு வந்து சேர்ந்தார் அகத்தியர்.
சித்திரை 1-ந்தேதி பாபநாசத்தில் சிவபெருமானும், பார்வதி தேவியும் திருமணக்கோலத்தில் அகத்தியருக்கு காட்சியளித்து அருளாசி வழங்கினர். மேலும் அகத்தியரை பொதிகை மலையை விட்டு நீங்காமல் எப்போதும் இருக்க வேண்டும் என்றும், கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தை பொதிகை மலையின் உச்சியில் இருந்து தாமிரபரணி நதியாக பாய விட வேண்டும் என்றும் ஈசன் கூறினார். அவ்வாறு பாய்ந்தோடும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி மூலம் இப்பகுதி செழுமையுற்று திகழ்கிறது.
சிவபெருமான் தன்னுடைய திருமணக் காட்சியை அகத்தியருக்கு அளித்த நிகழ்வு, ஆண்டு தோறும் பாபநாசம் கோவிலில் 10 நாள் உற்சவமாக நடைபெறும். சித்திரை மாத முதல் நாள் அன்று இரவில் திருக்கல்யாண காட்சி வைபவம் நடந்தேறும்.
இந்த ஆண்டுக்கான 10 நாள் உற்சவம், கடந்த 5-ந் தேதி தொடங்கியது. 10-ம் நாள் நிகழ்வான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணிக்கு தீர்த்தவாரி, இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது. நள்ளிரவு 1 மணி அளவில் சுவாமி-அம்பாள் இருவரும் திருமணக்கோலத்தில் அகத்திய முனிவருக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறும்.

பாபநாசம் கோவிலில் அகத்திய முனிவருக்கு இறைவன் திருமணக்கோலத்தில் காட்சி அருளியது பற்றி, கல்வெட்டிலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.