search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூட்டை உடைத்த கொள்ளையர்"

    • பணியாளர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறிகிடந்தன.
    • பீரோவில் பணம், நகை எதுவும் இல்லை என்றும், இதுகுறித்து போலீசில் புகார் அளிக்குமாறும் வீட்டின் உரிமையாளர் கூறினார்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் சுருளிபட்டி ரோடு சின்னவாய்க்கால் தெருவை சேர்ந்தவர் சங்கரன். இவர் ஐ.ஏ.எஸ் முடித்து தமிழக அரசு உயர்பதவியில் பணியாற்றியவர். தற்போது அவர் இறந்துவிட்ட நிலையில் அவரது மகன் சந்திரசூடன் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சந்திரசூடன் சென்னையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் உயர்பதவியில் பணியாற்றி வருகிறார்.

    இதனால் விடுமுறையில் மட்டும் தனது ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்த வீட்டில் 2 பணியாளர்கள் தினசரி வந்து சுத்தம் செய்துவிட்டு செல்வது வழக்கம். அதன்படி பணியாளர்கள் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறிகிடந்தன.

    உடனே இதுகுறித்து வீட்டின் உரிமையாளருக்கு பணியாளர் ஈஸ்வரன் (29) தகவல் தெரிவித்தார். அவர் பீரோவில் பணம், நகை எதுவும் இல்லை என்றும், இதுகுறித்து போலீசில் புகார் அளிக்குமாறும் கூறினார். இதனை தொடர்ந்து கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை மற்றும் முக்கிய தடயங்களை பதிவு செய்து சென்றனர்.

    கம்பம் நகரில் 24 மணிநேர அனுமதியற்ற பார்கள் தடையின்றி செயல்படுகிறது. இதனால் போதை கும்பல் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நள்ளிரவில் போதையில் வரும் நபர்கள் சாலையில் நிறுத்தியிருக்கும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பூட்டியிருக்கும் வீடுகளை உடைத்து கொள்ளையடித்து செல்கி ன்றனர். இதுதவிர நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறி சம்பவங்களும் நடந்து வருகின்றன.

    இதுபோன்ற குற்றங்களை தடுக்க வியாபாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் பல்வேறு இடங்க ளில் சி.சி.டி.வி காமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவைகள் உடைக்கப்பட்டும், பல இடங்களில் செயல்ப டாத நிலையிலும் உள்ளது. இரவு நேர ரோந்து போலீ சார் பணியில் இல்லாததால் போதை கும்பல் மற்றும் கொள்ளையர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது.

    எனவே மாவட்ட எஸ்.பி அதிரடி நடவடிக்கை எடுத்து அனுமதியின்றி செயல்படும் பார்கள் மற்றும் கொள்ளை யர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

    ×