search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலி மது பாட்டில்"

    • இந்த திட்டம் கடந்த 1-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்ததாரர்கள் தேர்வு ஏப்ரல் 18 -ந் தேதி நடைபெறுகிறது.

    கோவை,

    ஐகோர்ட்டு அறிவுறுத்தல்படி கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் கடந்த 1-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு கூடுதலாக ரூ.10 பெற்றுக்கொண்டு விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலி பாட்டில்களை மீண்டும் கடையில் ஒப்ப டைத்து விட்டு கூடுதலாக வழங்கிய ரூ.10 -ஐ பெற்றுகொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தால் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஜான் கூறியதாவது:

    கோவை மாவட்டத்தில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் 10-க்கு 10 என்ற அளவிலே உள்ளது. இதில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மதுபாட்டில் பெட்டிகளால் ஏற்கெனவே பணியாளர்களுக்கு போதிய இடவசதியில்லாமல் நெருக்கடி காணப்படுகிறது. தற்போது, காலி மது பாட்டில்கள் வைப்பதற்கு இடமில்லாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். காலி பாட்டில்களை திருடுவதற்கு வாய்ப்புள்ளதால் வெளியிலும் வைக்க முடியாத நிலை உள்ளது.

    திட்டம் செயல்பாட்டிற்கு வந்து 10 நாள்களுக்கு மேலாகியும் ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்படாததால் அனைத்து கடைகளிலும் காலி பாட்டில்கள் வைக்க இடமில்லாமல் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேபோல் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதனால் ஏற்கெனவே பணிச்சுமையுடன் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்தால் ஊழியர்களுக்கு மேலும் பணிச்சுமை அதிகரித்துள்ளது. விற்பனை நேரத்தில் காலி பாட்டில்களை பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காலிப்பாட் டில்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தினால் ஊழியர்கள் பணியாற்ற எளிதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். இது தொடர்பாக கோவை வடக்கு மண்டல டாஸ்மாக் மேலாளர் செல்வன் கூறியதாவது: காலி மதுபாட்டில்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்ததாரர்கள் தேர்வு ஏப்ரல் 18 -ந் தேதி நடைபெறுகிறது. ஒப்பந்ததா ரர்கள் நியமி க்கப்பட்டவுடன் காலி பாட்டில்கள் தேங்கும் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தின் மூலம் பொது இடங்களில் காலி பாட்டில்களை வீசிச் செல்லும் நிலை குறைந் துள்ளது என்றார்.

    கோவை, தெற்கு மண்டலத்தில் உள்ள 139 கடைகளில் கடந்த 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை 19 லட்சத்து 24 ஆயிரத்து 708 மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 14 லட்சத்து 4 ஆயிரத்து 565 பாட்டில்கள் மட்டுேம திரும்ப பெறப்பட்டுள்ளன. 5.20 லட்சம் பாட்டில்கள் திரும்ப வழங்கப்படாமல் உள்ளது.

    வடக்கு மண்டலத்தில் உள்ள 166 கடைகள் மூலம் கடந்த 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை 17 லட்சத்து 56 ஆயிரத்து 997 மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 12 லட்சத்து 91 ஆயிரத்து 506 காலி பாட்டில்கள் மட்டுமே திரும்ப பெறப்பட்டுள்ளன. 4.65 லட்சம் காலி பாட்டில் கள் வழங்கப்படாமல் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×