search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரக்கொன்றை மலர்கள்"

    • சரக்கொன்றை மரம், கிராமப் பகுதியில் மிக அரிதாகவே காணப்படுகிறது.
    • சிவபெருமானுக்கு உகந்த மலர் என்பதால், பல கோவில்களில் தலவிருட்சமாகவும் உள்ளது.

    உடுமலை :

    உடுமலையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சித்திரை பூவான சரக்கொன்றை மலர்கள் தற்போது தெருவெங்கும் பூத்துக் குலுங்குகிறது.

    தமிழ் புத்தாண்டு சித்திரையை வரவேற்கும் விதமாக, பொன்னிற கொன்றை மலர்கள் சரம் சரமாக பூத்துக் குலுங்குகின்றன.இதுதான் கொன்றை மரம் என, தெரியாமலே நகரங்களில், பல இடங்களில் வளர்க்கப்பட்டு வரும் சரக்கொன்றை மரம், கிராமப் பகுதியில் மிக அரிதாகவே காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், சித்திரை மாதத்தில் மட்டும் பூ பூக்கும் இலையுதிர் வகையைச் சேர்ந்த மரம் இது. சிவபெருமானுக்கு உகந்த மலர் என்பதால், பல கோவில்களில் தலவிருட்சமாகவும் உள்ளது.

    இதற்கு சித்திரைப் பூ, சுவர்ண புஷ்பம் என்ற பெயர்களும் உண்டு. சரக்கொன்றை மரத்தின் பூ, இலை மற்றும் மரப் பட்டைக்கு மருத்துவ குணம் நிறைந்து காணப்படுவதால் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.வெப்ப மண்டலம் மற்றும் குறை வெப்ப மண்டலப் பகுதிகளில் நன்கு வளரக் கூடியது. நீர் வடியக்கூடிய நிலத்தில் சிறப்பாக வளரும். கோடையின் வறட்சியையும் தாங்கக் கூடியது. சித்திரை மாதத்தில், சரம் சரமாக மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்கும். ஒரு அடி நீளத்திற்கும் அதிகமாக வளரும், இந்த பூச்சரங்கள்பொன்னிறமாக ஜொலிக்கும். புத்தாண்டில் சரக்கொன்றை மலரை பார்ப்பதால், வாழ்வில் வளம் கூடும். ஆண்டு முழுவதும் இனிமையாக அமையும் என்பது நம்பிக்கை.

    கேரளாவிலும் விஷு கனி தரிசனத்தில் கொன்றை மலர் நிச்சயம் இடம் பெறும். உடுமலைப்பேட்டை ராமசாமி நகரில் தெருவெங்கும் சரக்கொன்றை மரத்தில் பூக்கள் கொத்துக் கொத்தாக பூத்துள்ளன. இந்த மரத்தை இவ்வழியே செல்வோர் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

    ×