search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேசுப் மஹிந்திரா"

    • பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற கேசுப் மஹிந்திரா 1947 ஆண்டு வாக்கில் மஹிந்திரா நிறுவனத்தில் இணைந்தார்.
    • பல்வேறு தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் நிர்வாக குழுவில் கேசுப் மஹிந்திரா பணியாற்றி இருக்கிறார்.

    இந்திய ஆட்டோமொபைல் துறையின் முன்னோடியும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட் தலைவருமான கேசுப் மஹிந்திரா இன்று அதிகாலை காலமானார்.

    மஹந்திரா குழும தலைவர் பதவியை 48 ஆண்டுகளாக வகித்து வந்த கேசுப் மஹிந்திரா, ஆட்டோமொபைல் துறை மட்டுமின்றி தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், நிதி சேவைகள் மற்றும் மருத்துவம் என பல்வேறு துறைகளில் மஹிந்திரா குழுமம் களமிறங்க முக்கிய காரணமாக விளங்கினார்.

    இதுதவிர வில்லிஸ் கார்ப்பரேஷன், மிட்சுபிஷி, இண்டர்நேஷனல் ஹார்வெஸ்டர், யுனைடட் டெக்னாலஜிஸ், பிரிடிஷ் டெலிகாம் உள்பட பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் மஹிந்திரா கூட்டணி அமைக்கவும் முக்கிய பங்கு வகித்தார்.

     

    அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற கேசுப் மஹிந்திரா 1947 ஆண்டு வாக்கில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தில் இணைந்தார். 1963 வாக்கில் இவர் மஹிந்திரா நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 2012 ஆம் ஆண்டு மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக குழு இயக்குனர்களில் ஒருவராக கேசுப் மஹிந்திரா தொடர்ந்தார்.

    ஸ்டீல் நிறுவனமாக துவங்கி இன்று உலகளவில் பல்வேறு வியாபாரங்களில் ஈடுபட்டு வரும் வியாபார குழுமமாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன மதிப்பு 15.4 பில்லியன் டாலர்களாக உயர்ந்து இருக்கிறது. நிறுவனத்தின் தலைமை பொறுப்பை கேசுப் மஹிந்திரா அன்று துணை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்த ஆனந்த் மஹிந்திராவிடம் ஒப்படைத்தார்.

    பல்வேறு தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் நிர்வாக குழுவில் பணியாற்றி இருக்கும் கேசுப் மஹிந்திரா ஹட்கோ நிறுவனர் ஆவார். மேலும் செயில், டாடா ஸ்டீல், டாடா கெமிக்கல்ஸ், இந்தியன் ஒட்டல்ஸ், ஐஎப்சி. ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎப்சி என பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களின் குழுக்களில் இடம்பெற்று இருக்கிறார்.

    கேசுப் மஹிந்திராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தலைவர் வினோத் அகர்வால், இந்திய ஆட்டோமொபைல் துறை முன்னோடிகளில் ஒருவரை இழந்துவிட்டதாக தெரிவித்து இருக்கிறார். 

    ×