என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிஹூ நடனம்"
- அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர்.
- அரங்கம் அதிரும் வகையில், நடன கலைஞர்களை சுற்றி இசை வாத்தியங்கள் முழங்கியபடியே இருந்தது.
கவுகாத்தி:
அசாமிய கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அம்சமாக விளங்கும் போஹா பிஹூதிருவிழாவில் பிஹூ நடனம் இடம்பெறுவது வழக்கம்.
இந்நிலையில் பிஹூ நடனத்தை உலக அரங்கிற்கு எடுத்து செல்லும் வகையிலும், இதனை உலகம் முழுவதும் அறிந்து கொள்ளும் வகையிலும் மிக பெரிய அளவில் இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடத்துவதற்கு மாநில அரசு ஏற்பாடு செய்தது.
இதற்காக அசாம் மாநிலம் முழுவதும் ஆடிஷன்கள் நடத்தப்பட்டு, 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தொடர்ந்து சில நாட்களாகவே நாட்டுப்புற கலைஞர்கள் ஒத்திகையிலும் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள சருசஜாய் மைதானத்தில் பிஹூ நடன நிகழ்ச்சி நடந்தது.
இதில் அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் ஒரே இடத்தில் திரண்டனர்.
அவர்கள் தங்கள் மாநிலத்தின் பாரம்பரிய நடனமான பிஹூ நடனத்தை ஆடினர். சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக நடனம் நீடித்தது. அப்போது அரங்கம் அதிரும் வகையில், நடன கலைஞர்களை சுற்றி இசை வாத்தியங்கள் முழங்கியபடியே இருந்தது.
இது மைதானத்தில் திரண்டிருந்த பொதுமக்களை மிகவும் கவர்ந்திழுத்தது. இது அந்த மாநிலத்தில் உள்ள ஊடகங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதுகுறித்து முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறும்போது, மாநிலத்தின் பாரம்பரிய நடனமான பிஹூ நடனத்தை உலகம் முழுவதும் தெரியப்படுத்தும் வகையிலேயே இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வு அசாமின் கலாசார வரலாற்றை உலக முழுவதும் அறிய வைத்துள்ளதில் பெருமை அடைகிறோம் என்றார்.