என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் குடோன்"
- தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்து காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்ட கலெக்டர் குடியிருப்புக்கு பின்புறம், ஒட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன் என்பவர் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்றிரவு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கி உள்ளது.
இதனை அருகே இருந்தவர்கள் பார்த்து தருமபுரி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் 3 தீயணைப்பு வாகனங்களில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், தீ கட்டுக் கடங்காமல் மளமளவென எரிந்தது. பின்னர், அரூர், பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கபட்டு கொளுந்து விட்டு எரிந்த தீயை தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் போராடி அணைத்தனர்.
மேலும், தீ விபத்து நிகழ்ந்த பிளாஸ்டிக் கம்பெனி அருகில் தனியார் பேட்டரி கம்பெனி, லாரி பார்க்கிங் உள்ளிட்டவைகள் இருப்பதால் அங்கு தீ பரவாத வண்ணம் தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர். தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த தீ விபத்தில் சுமார் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்து காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் தருமபுரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
- மளமளவென பரவிய தீ குடோனில் இருந்த பழைய பொருட்கள் குடோனில் இருந்த எந்திரங்கள் மீது பற்றி எரிய தொடங்கியது.
- விண்ணை முட்டும் அளவுக்கு சூழ்ந்துள்ள கரும்புகையால் அப்பகுதி முழுவதும் காற்று மாசடையும் சூழல் நிலவி உள்ளது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாலி என்னும் இடத்தில் உடுமலைப்பேட்டையை சேர்ந்த பிரபு என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் அமைந்துள்ளது.13 வருடங்களாக பிரபு இந்த குடோனை நடத்தி வருகிறார்.
பழைய பிளாஸ்டிக் பொருட்கள், பழைய பைப்புகள் போன்ற பொருட்கள் குடோனில் வைக்கப்பட்டிருந்த நிலையில் குடோனுக்கு அருகே கட்டுமான தொழிலாளர்கள் தங்கி உள்ள குடிசை பகுதியில் இருந்து இன்று காலை 9 மணி அளவில் தீ பரவியது.
மளமளவென பரவிய தீ குடோனில் இருந்த பழைய பொருட்கள் குடோனில் இருந்த எந்திரங்கள் மீது பற்றி எரிய தொடங்கியது. பின்னர் குடோன் முழு வதும் பரவி அனைத்து பொருட்களும் எரிய தொடங்கியதால் கடும் புகைமூட்டம் அப்பகுதி முழுவதும் சூழ்ந்தது. மேலும் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஓரமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதுடன் சுமார் 10.கி.மீ., தூரம் புகை சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் 5 தண்ணீர் லாரிகளை வரவழைத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து பல்லடம் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள பொது மக்களிடையே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விண்ணை முட்டும் அளவுக்கு சூழ்ந்துள்ள கரும்புகையால் அப்பகுதி முழுவதும் காற்று மாசடையும் சூழல் நிலவி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்