search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நலப்பணி"

    • நாட்டு நலப் பணித் திட்டத்தின் சார்பில் 7 நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமின் நிறைவு விழா பனங்குப்பத்தில் நடைபெற்றது.
    • விழாவிற்கு கல்லூரி முதல்வர் சிவகுமார் தலைமை தாங்கி சிறப்பு உரையாற்றினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டத்தின் சார்பில் 7 நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமின் நிறைவு விழா பனங்குப்பத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சிவகுமார் தலைமை தாங்கி சிறப்பு உரையாற்றினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் .சுடர்கொடி வரவேற்புரை ஆற்றினார். திட்ட அறிக்கையை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் குணசேகர் வாசித்தார். இம்முகாமின் நிறைவு விழாவில் விழுப்புரம் எம்.எல்.ஏ. லட்சுமணன் கலந்து கொண்டு மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கி பாராட்டி கவுரவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது,

    இந்த முகாமானது கடந்த ஒரு வாரமாக சகாதேவன்பேட்டை, இராமையன்பாளையம், பனங்குப்பம், நல்லரசன்பேட்டை, தொடர்ந்தனூர் ஆகிய ஊர்களில் நடைபெற்றிருக்கிறது. முகாமின் மூலம் இந்த 5 ஊர்களிலும் மழை நீர் சேகரிப்பின் அவசியம், சாலைகளைச் சீரமைத்தல், கோயில்களைச் சீரமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், சிறு சேமிப்பின் அவசியம், எய்ட்ஸ் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு. இயற்கை உணவு முறையின் அவசியம், பிற நோய்களின் தன்மைகளை எடுத்துரைத்தல் போன்ற பணிகளை செய்யத் வலியுறுத்தி உள்ளீர்கள் என்பது வரவேற்கத்தக்கது. மேலும் மாணவர்களாகிய நீங்கள் இதுபோன்ற சமூகப் பணியில் ஈடுபடுவது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். இதில் கோலியனூர் யூனியன் சேர்மன் சச்சிதாநந்தம், சகாதேவன்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் பிரபலட்சுமி குமார், கவுன்சிலர் கிருபாநிதி பனங்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் கோமதி மணி,கவுன்சிலர் பச்சையம்மாள் இன்பசேகரன் தொடர்ந்தனூர் ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா செந்தில் குமார், தளவானூரி கவுன்சிலர் தமிழ்ச்செல்வி கேசவன், முன்னாள் தலைவர்கள் ராஜேஸ்வரி சுதாகர், செந்தில்குமார், துணைத்தலைவர்கள் சுதா -சங்கர் , சரவணன், அன்புசேகர் விழுப்புரம் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் . சிவகங்கா . பேராசிரியர் கார்த்திகேயன் . இம்முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் தனம் விஜயரங்கம், குணசேகர், சுடர்கொடி, சத்யா, ஹரிகரன் ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்களும் கிராமப் பொதுமக்களும் கல்லூரி பேராசிரியர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். திட்ட அலுவலர் விஜயரங்கம் நன்றி உரையாற்றினார்.

    ×