என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விமான முனையம்"
- தலைநகர் டாக்காவில் இருந்து பயணிகள் விமானம் இன்று மதியம் 12.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் உள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் தரையிறங்கியது.
- பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக 500 மத்திய தொழிற்படை பாதுகாப்பு வீரர்கள் இன்று முதல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் 1.97 லட்சம் சதுர மீட்டரில், அதி நவீன ஒருங்கிணைந்த விமான முனையம் கட்டப்பட்டது. இந்த புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ந்தேதி திறந்து வைத்தார்.
சர்வதேச விமானங்கள் இயக்கப்பட தயார் நிலையில் இருந்த இந்த முனையத்தில் கடந்த சில நாட்களாக விமானங்களை நிறுத்தி சோதனை ஓட்டம் நடந்து முடிந்தது.
இந்நிலையில் இந்த புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் இருந்து இன்று பயணிகள் விமானத்தை இறக்கி இன்று முதல் இயக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி வங்காள தேசம் தலைநகர் டாக்காவில் இருந்து பயணிகள் விமானம் இன்று மதியம் 12.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் உள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் தரையிறங்கியது.
இதற்கிடையே அந்த விமானத்தில் பயணம் செய்ய இன்று காலை புதிய விமான முனையத்திற்கு வந்த பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
புதிய முனையத்தில் உள்ள அதிநவீன வசதிகள், மின்விளக்கு அலங்காரம் மற்றும் தமிழக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வண்ண படங்கள் பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
இந்த விமானம் மீண்டும் 1.55 மணிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் வங்களாதேசம் செல்ல இருக்கிறது. புதிய விமான முனையம் செயல்பாட்டுக்கு வந்ததால் பரிசோதனைகளை முடித்து விட்டு விரைந்து செல்ல முடியும் என்று பயணிகள் தெரிவித்தனர்.
புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் பயணிகள் விமானம் இயக்கப்படுவது சோதனை முறையில் தான். சில நாட்களுக்கு பிறகு முழு அளவில் விமான சேவை இந்த முனையத்தில் இருந்து செயல்பட ஏற்பாடுகள் செய்யப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் இந்த புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக 500 மத்திய தொழிற்படை பாதுகாப்பு வீரர்கள் இன்று முதல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை விமான நிலையத்தில் தற்போது 1500 பேர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இதனால் பயணிகளின் பாதுகாப்பு சோதனைகள் விரைவாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்