search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்ரேஸ்வரி அம்மன்"

    • 30-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது
    • சக்கர தீவட்டியுடன் அம்மன் பவனி போன்றவை நடக்கிறது.

    நாகர்கோவில் :

    கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 30-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி, தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, மதுரை ஆதீனம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.

    முதல் நாள் காலையில் 4.30 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் தேவஸ்தான மேல்சாந்தி உன்னி கிருஷ்ணன் போற்றி முன்னி லையில், தந்திரி சங்கரன் நம்பூதிரி திருக்கொடியேற்று கிறார். தொடர்ந்து நேர்ச்சை வாணவேடிக்கையும், பொங்கல் வழிபாடும் நடை பெறும். மாலையில் இந்து சமய மாநாடு தொடக்க விழா நடக்கிறது.

    முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி மாநாட்டை தொடங்கி வைக்கிறார். சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் ஆசியுரை வழங்கு கிறார்.

    இரண்டாம் நாளில் காலை யில் சந்தனக்குட பவனியும், மாவட்ட அளவிலான பஜனை போட்டியும், மாலை யில் விபாக் சேவா பிரமுக் ஈஸ்வரன்ஜி தலைமையில் இந்து சமய மாநாடும் இரவு அம்மன் பவனியும் மேஜிக் பேலஸ் நிகழ்ச்சியும், மூன்றாம் நாள் காலையில் சந்தனக்குட பவனியும் சூலினி துர்கா ஹோமமும், மாவட்ட அளவி லான வினாடி-வினா போட்டியும் மாலையில் அனந்தபுரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பத்மஸ்ரீ டாக்டர் மார்த்தாண்டம் பிள்ளை தலைமையில் இந்து சமய மாநாடும் நடைபெறுகிறது.

    4-ம் நாள் காலையில் சந்தனக்குட பவனியும், இரவு இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா தலைமையில் இந்து சமய மாநாடும், 5-ம் நாள் மாலையில் மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ் தலைமையில் இந்து சமய மாநாடு நடக்கிறது. இதில் மதுரை ஆதீனம் ஆசியுரை வழங்குகிறார்.

    6-ம் நாள் காலையில் நவக்கிரக ஹோமமும், இரவு அம்சி மது தலைமையில் இந்து சமய மாநாடு நடக்கிறது. கோலாகலம் ஸ்ரீனிவாசன் சிறப்புரையாற்றுகிறார்.

    7-ம் நாள் காலையில் நவக்கிரக ஹோமமும், 9 மணிக்கு மாவட்ட அளவி லான பரதநாட்டிய போட்டி யும், இரவு எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமை யில் இந்து சமய மாநாடு நடக்கிறது. தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்று கிறார்.

    8-ம் நாள் காலையில் மாநில அளவிலான பேச்சு, கட்டுரை, கவிதை பாட்டு போட்டிகள் நடக்கிறது. இரவு முனைவர் சபிதா ராஜேஷ் தலைமையில் இந்து சமய மகளிர் மாநாடும், அம்மன் பவனியும் நடக்கிறது.

    9-ம் நாள் காலையில் மார்த்தாண்டம் நல்லூர் குறும்பேற்றி பகவதி அம்மன் கோவிலில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் ஏந்தி வரும் நிகழ்வும், பாலமுருகனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகமும், பால் அபிஷேகமும், 10-ம் நாள் காலையில் பக்தி இன்னிசையும், அம்மன் பவனியும் இரவு கோவில் திருமடங்கள் தென்பாரத அமைப்பாளர் சரவணன் கார்த்திக் தலைமையில் இந்து சமய மாநாடு நடக்கிறது. இரவு திருக்கொடி இறக்குதல் நிகழ்வுக்கு பின்னர் மாபெரும் வானவேடிக்கை நடக்கிறது.விழா நாட்களில் தினமும் காலை, மாலைகளில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், மலர் நிவேத்யம், மகா கணபதி ஹோமம், நவக பஞ்ச கவ்ய கலச பூஜை, புஷ்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை, இரவு முளபூஜை, 8 மணிக்கு அத்தாழ பூஜை, சக்கர தீவட்டியுடன் அம்மன் பவனி போன்றவை நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் குமார், செயலாளர் துளசிதாஸ், பொருளாளர் சவுந்தராஜன், துணை தலைவர் முருகன் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    ×