search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்ணகி கோவிலில் அதிகாரிகள் ஆய்வு"

    • கண்ணகி கோவில் திருவிழா சார்பாக இரு மாநில அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் கடந்த 17ந் தேதி தேக்கடியில் நடைபெற்றது.
    • குடிநீர், சுகாதாரம், மருத்துவ முகாம் அமையும் இடங்களை அவர்கள் பார்வையிட்டு கோவில் வளாகத்தில் சீரமைப்பு பணிகளையும் பார்வையிட்டு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்திரை முழு நிலவு விழா சித்ரா பவுர்ணமியன்று கொண்டா ப்பட்டு வருகிறது. ஒரு வாரம் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வந்த நிலையில் கேரளாவின் கெடுபிடியால் ஒருநாள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 5ந் தேதி நடைபெற உள்ளது. விழா நடத்துவது தொடர்பாக இரு மாநில அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் கடந்த 17ந் தேதி தேக்கடியில் நடைபெற்றது. இதில் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, இடுக்கி மாவட்ட கலெக்டர் ஷீபாஜார்ஜ் தலைமையில் இருமாநில அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

    இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய பாரதி, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டியன், வட்டாட்சி யர் சந்திரசேகர், கேரள அரசு சார்பில் பெரியாறு புலிகள் காப்பக துணை இயக்குனர் பாட்டீல்சுயோக் சுபாஷ்ராவ், இடுக்கி மாவட்ட துணை கலெக்டர் அருண்நாயர், பீர்மேடு டி.எஸ்.பி. குரியகோஷ் மற்றும் வனத்துறை, போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகள் மங்கலதேவி கண்ணகி கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

    பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். எனவே குடிநீர், சுகாதாரம், மருத்துவ முகாம் அமையும் இடங்களை அவர்கள் பார்வையிட்டனர். மேலும் கோவில் வளாகத்தில் சீரமைப்பு பணிகளையும் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.

    ×