search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலமரம் அகற்றம்"

    • சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்கா அமைக்கவும் ரூ.34 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகள் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது.
    • அதில் இரவு நேரங்களில் 250 லோடு மண் குட்டையிலிருந்து கடத்தப்பட்ட தாகவும், மேலும் சுடுகாட்டிற்கு இடம் இல்லாமல் மண் சமன்ப டுத்தும் பணி நடைபெறு வதாகவும் தெரிவித்திருந்தார்.

    காகாபாளையம்:

    சேலம் மாவட்டம் இடங்க ணசாலை நகராட்சிக்கு உட்பட்ட கொசவப்பட்டியில் உள்ள குட்டை மற்றும் அதன் அருகே உள்ள நிலம் என சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலத்தில் நீர்தேக்கி வைக்க வும் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், சிறு வர்கள் விளையாடி மகிழ பூங்கா அமைக்கவும் ரூ.34 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகள் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமராஜ்(வயது 60) என்பவர் கடந்த 24-ந்தேதி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அதில் இரவு நேரங்களில் 250 லோடு மண் குட்டையிலிருந்து கடத்தப்பட்ட தாகவும், மேலும் சுடுகாட்டிற்கு இடம் இல்லாமல் மண் சமன்ப டுத்தும் பணி நடைபெறு வதாகவும் தெரிவித்திருந்தார்.

    அதனை தொடர்ந்து சங்ககிரி வருவாய் துறை யினர் குட்டையை களஆய்வு செய்து அறிக்கையை மேலதிகாரிகளுக்கு அனுப்பினர். குட்டையின் ஒரு பகுதியில் சுடுகாடு இருந்தது. இங்கு சுமார் 35 ஆண்டு பழமையான ஆலமரம் நின்றது. அப்பகு திக்கு வருவோர் இளைப்பாற அந்த மரத்தை பயன்படுத்தினர்.

    மேலும் அதில் நுாற்றுக்க ணக்கான பறவையினங்கள் குடியிருந்து வந்தன.இந்நிலையில் அந்த மரத்தின் 90 சதவீத கிளைகளை குட்டையை சீர்செய்யும் பணிக்காக அகற்றிவிட்டனர்.இதனால் மக்கள் இளைப்பாற இடம் இல்லாமல் அவதிபொபடும் நிலை ஏற்பட்டுள்ளது., பறவைகள் கூடுகட்ட வழியின்றி தவிக்கின்றன.

    பொதுவாக மரங்களை அகற்ற வேண்டும் என்றால் அந்தந்த பகுதிகளை சேர்ந்த வருவாய்துறையினரிடம் அனுமதி வேண்டும் என்பது அரசு விதியாகும்.ஆனால் கொசவப்பட்டி குட்டையி லுள்ள ஆலமர கிளைகளை அகற்ற சங்ககிரி வருவாய்து றையினரிடம் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக அகற்றியது பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கொந்த ளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    ×