search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சமூர்த்திகள் வீதி உலா"

    • 2-ந் தேதி காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து சிறிது தொலைவு இழுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறது.
    • 8-ந் தேதி காலை மஞ்சள் நீர் விழாவும், மாலையில் மயில் வாகன காட்சியும் நடக்கிறது.

     அவினாசி:

    அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு நேற்று இரவு 10.30 மணியளவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் விநாயக பெருமான் மூசிக வாகனத்திலும், சோமஸ்கந்தர் ரிஷப வாகனத்திலும், கருணாம்பிகை அம்மன் காமதேனு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும், பூமிநீளாதேவி கரி வரதராஜப் பெருமாள் கருட வாகனத்திலும் எழுந்தருளி 63நாயன்மார்களுக்கு காட்சி தந்த வைபவம் நடந்தது. அப்போது வாணவேடிக்கை, அதிர் வேட்டுகள் முழங்க சிவகன பூத வாத்தியம் இசைக்கப்பட்டது. கோவிலில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு கடைவீதி, மேற்கு ரதவீதி, வடக்குரவீதி, கிழக்கு ரதவீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுவாமி உலா வரும் வீதிகளில் வழி நெடுகிலும், மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டு பூரம் குடைகள் அமைக்கப்படிருந்தன.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கற்பக விருட்சம், திருக்கல்யாணம், யானை வாகன காட்சிகள் நடக்கிறது. நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு பூரநட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகளும், பெருமாளும் திருதேருக்கு எழுந்தருளல் நடக்கிறது. 2-ந் தேதி காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து சிறிது தொலைவு இழுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறது.

    3-ந் தேதி காலை 9 மணிக்கு மீண்டும் தேர் இழுக்கபட்டு நிலை அடைகிறது. 4-ந் தேதி காலை 8 மணிக்கு அம்மன் தேர் இழுக்கப்படுகிறது. அன்று மாலை வண்டித்தாரை நிகழ்ச்சி நடக்கின்றது. 5-ந் தேதி பரிவேட்டை, 6-ந் தேதி தெப்பதேர் விழாவும், 7-ந் தேதி நடராஜர் தரிசனம் நிகழ்ச்சியும், 8-ந் தேதி காலை மஞ்சள் நீர் விழாவும், மாலையில் மயில் வாகன காட்சியும் நடக்கிறது.

    ×