search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிவாளால் வெட்டிய கும்பல்"

    • பணத்தை திருப்பி தராமலும், தற்போது தங்கியுள்ள வீட்டை தனது பெயரில் எழுதி வைக்ககோரி பிரச்சினை செய்துள்ளார்.
    • படுகாயமடைந்த மூதாட்டியை கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    கூடலூர்:

    கூடலூர் அருகே கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்தவர் ராசு மனைவி தேனம்மாள்(75). இவரது உறவினர் ஜீவா(56). இவர் தேனம்மாளின் வீட்டில் குடியிருந்து வருகிறார். அவரிடம் ரூ.2லட்சம் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை திருப்பி தராமலும், தற்போது தங்கியுள்ள வீட்டை தனது பெயரில் எழுதி வைக்ககோரி பிரச்சினை செய்துள்ளார்.

    இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜீவா, பசுபதி, இலக்கியா, ஜெயச்சந்திரன் ஆகியோர் தேனம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஜீவா அரிவாளால் தேனம்மாளை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவர் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்குபதிவு செய்து ஜீவாவை கைது செய்தனர்.

    • தனது நண்பருடன் காளியம்மன் கோவில் அருகே பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காரை மறித்து நகை பறிக்க முயன்ற வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவர்கள் என தெரிய வந்தது.

    பழனி:

    பழனி 1-வது வார்டு காமராஜர் நகரை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் மகன் சாலமன் (வயது21). இவர் தனது நண்பர் மாரி முத்துவுடன் காளியம்மன் கோவில் அருகே பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் திடீரென 10-க்கும் மேற்பட்ட வாலி பர்கள் பயங்கர ஆயுதங்க ளுடன் இருவரையும் தாக்கினர். மேலும் சரமாரியாக அரிவாளால் வெட்டியதால் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஒன்று கூடினர்.

    இதை பார்த்ததும் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மாரிமுத்து, சாலமன் ஆகியோரை பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காரை மறித்து நகை பறிக்க முயன்ற வழக்கில் மாரிமுத்து மற்றும் சாலமன் ஆகியோர் கைதாகி சிறைக்கு சென்றவர்கள் என தெரிய வந்தது. எனவே அதில் ஏற்பட்ட முன்வி ரோதம் காரணமாக வாலிபர்கள் தாக்கப்பட்டிரு க்கலாம். மேலும் தாக்குதல் நடத்திய கும்பலை போலீ சார் தேடி வருகின்றனர்.

    ×